ஆப்பிள் போன் பயன்படுத்தியதற்காக, கட்சி எம்.பியை 3 மாதம் சஸ்பெண்ட் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறைகளுக்கு மாறாக ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த மேற்குவங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. கட்சியிலிருந்து 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ரிடாப்ரதா பானர்ஜி. அம்மாநிலத்தில் கட்சியின் முக்கிய புள்ளியாக விளங்குபவர். அதற்கு பரிசாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்த நிலையில்தான், ரிடாப்ரதா பானர்ஜிக்கு புது பிரச்சினை ஏற்பட்டது. அதுவும் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாக புகார் எழுந்தது.

டிவி சேனல் செய்தி

டிவி சேனல் செய்தி

இவருடைய வாழ்க்கை முறை கம்யூனிஸ்ட் நடைமுறைகளுக்கு மாறாக இருப்பதாக கட்சிக்குள் இருந்தும் வெளியே இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அவருடைய கடந்த ஆண்டு பயணச்செலவு மட்டும் 69 லட்சத்து 25 ஆயிரம் என்று ஆங்கில டிவி சேனல் ஒன்று செய்தி ஒளிபரப்பியது.

மூன்று மாதங்கள் சஸ்பெண்ட்

மூன்று மாதங்கள் சஸ்பெண்ட்

இந்த தகவல் வெளியானதும், மார்க்சிஸ்ட் கட்சி தலைமை அதிருப்தியடைந்தது. இதையடுத்து ரிடாப்ரதா பானர்ஜியை மூன்று மாதங்களுக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து மாநிலக்குழு உத்தரவிட்டுள்ளது.

ஆப்பிள் போன்

ஆப்பிள் போன்

இதனிடையே ஆடம்பரமாக ஆப்பிள் போன், ஆப்பிள் வாட்ச், மோன்ட் பிளாங்க் பேனா ஆகியவற்றை பயன்படுத்தியதாக மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் புகார் செய்தனர். அது என்ன மோன்ட் பிளான்க் பேனா என்கிறீர்களா? அந்த போனின் விலை சுமார் 35 ஆயிரம் ஆகும். இதுதான் நடவடிக்கைக்கு முக்கிய காரணம்.

மேல் நடவடிக்கையும் உள்ளதாம்

மேல் நடவடிக்கையும் உள்ளதாம்

புகார்களையடுத்து, ரிடாப்ரதா பானர்ஜி மீது விசாரணை நடத்த மாநிலக்குழு ஒரு கமிட்டி அமைத்துள்ளது. கமிட்டியிடம் அவர் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பொறுத்து மேல்நடவடிக்கை இருக்கும் என கருதப்படுகிறது. முதல்கட்ட நடவடிக்கையே 3 மாத சஸ்பெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Communist Party of India (Marxist)’s Rajya Sabha MP from West Bengal Ritabrata Banerjee is fighting a losing battle with his party, which ideologically encourages an austere lifestyle.
Please Wait while comments are loading...