For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்பை விட மிகவும் கெட்டுப்போயுள்ளது கங்கை.. மோடியின் நமமி கங்கை திட்டம் என்ன ஆச்சு?

கங்கை நதி முன்பைவிட மிகவும் கெட்டுப்போயிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    முன்பை விட மோசமாக அசுத்தம் அடைந்துள்ளது கங்கை நதி- வீடியோ

    டெல்லி: கங்கை நதி முன்பைவிட மிகவும் கெட்டுப்போயிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. கங்கையில் கலக்கும் கழிவுகள் 2014ஆம் ஆண்டைவிட தற்போது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

    கங்கை நதியை சுத்தம் செய்ய மத்திய அரசு 'நமமி கங்கா' எனும் திட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் முலம் செயல்படுத்தி வருகிறது. இந்த துறையின் அமைச்சராக உள்ள உமாபாரதி கங்கை நதியை சுத்தம் செய்யும் நமமி கங்கா திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் விரைவில் முடியும் என தெரிவித்திருந்தார்.

    ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்தேகம் எழுப்பியிருந்தது.

    கங்கையில் கழிவுகள்

    கங்கையில் கழிவுகள்

    இதற்கான பதிலில் 2014 ஆம் ஆண்டைக் காட்டிலும் தற்போதைய கங்கை நீர் ஆய்வக முடிவில் பாக்டீரியாக்களின் தாக்கம் அதிகமாகி இருப்பது தெரியவந்துள்ளது. பிதரமர் மோடியின் நமமி கங்கை திட்டம் தொடங்கிய பிறகே கங்கையில் கழிவுகள் கலப்பது அதிகரித்துள்ளது.

    58% அதிகரிப்பு

    58% அதிகரிப்பு

    கங்கை மறுசீரமைப்பு அமைச்சகத்தின் தகவலின்படி நகரின் நீர்வழங்கல் பகுதியில் கோலிஃபார்ம் பாக்டீரியா 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது.

    20 மடங்கு அதிகம்

    20 மடங்கு அதிகம்

    100 மிலி லிட்டர்களில் 2,500 க்கும் மேற்பட்ட நிறமி நுண்ணுயிரிகள் இருப்பதாகவும் இது குளிக்கும் போது பாதுகாப்பற்றதாக கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாரணாசியின் மால்வியா பாலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கங்கை நீர் மாதிரியில் அதிகாரப்பூர்வ தரங்களைவிட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமான பாக்டீரியா கலந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

    நோய்க்கிருமி அதிகரிப்பு

    நோய்க்கிருமி அதிகரிப்பு

    வல்லுநர்கள் கூற்றுப்படி, கோலிஃபார்ம் பாக்டீரியா மற்றும் ஒரு நீர்வழி மற்ற நோய்க்கிருமி அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐந்து கழிவுநீர் வடிகால்

    ஐந்து கழிவுநீர் வடிகால்

    "வாரணாசியில் கங்கை நதியில் ஐந்து கழிவுநீர் கால்வாய்கள் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான லிட்டர் கழிவு நீர் கலப்பதாக மத்திய தகவல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவை மேற்கோளிட்டு, தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்ஸிஜன் அளவு குறைவு

    ஆக்ஸிஜன் அளவு குறைவு

    நீர்வாழ் உயிரினங்கள் நகரத்தின் கரையோரங்களில் இறந்து மிதப்பதாகவும் கங்கை நதியில் ஆக்ஸிஜன் அளவு குறைவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2500 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கங்கை நதி பல இடங்களில் மாசுபட்டு இருப்பதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

    English summary
    The ganga holi rever polluted more than before says RTI. The Namami Gange project is not working it seems.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X