நாடு முழுவதும் இன்று இரவு 12 மணி வரை வருமான வரித்துறை அலுவலகங்கள் திறந்திருக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 வரை வருமான வரித்துறை அலுவலகங்கள் திறந்திருக்கும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள வருமானவரித்துறை அலுவலகங்கள் இன்று இரவு 12 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் வருமானவரித் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இந்த அறிவிப்பினை வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

The IT Department has announced that the Income Tax Offices will be open till 12 tonight

2016-17ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இதனால் விடுமுறை நாளிலும் மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வருமான வரி தாக்கல் செய்தனர்.

ஆனால் திடீரென வருமான வரித்தாக்கல் செய்ய காலக்கெடு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதாவது இன்று வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.வருமானவரி கணக்குத்துறையின் சர்வர் முடங்கியதை அடுத்து இந்த கந்த காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் வருமான வரித்துறை அலுவலகங்கள் இன்று நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த அறிவிப்பை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Income Tax Department has announced that the Income Tax Offices will be open till 12 midnight today. Today is the last day to pay the Income tax.
Please Wait while comments are loading...