For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடர் தொடக்கம்.. அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி!

நடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஜனவரி 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. லோக்சபாவில் புதிய மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறவுள்ளது.

நவம்பர் 3வது வாரத்தில் தொடங்கப்படவேண்டிய கூட்டத்தொடர் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலை முன்னிட்டு தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் இன்று தொடங்கியது.

புதிய அமைச்சர்கள் அறிமுகம்

புதிய அமைச்சர்கள் அறிமுகம்

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று முதல் ஜனவரி 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. லோக்சபா சுஷ்மிதா மகாராஜன் தலைமையில் இன்று காலை கூடியது. நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட புதிய அமைச்சர்களை சபைக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார்.

நாடாளுமன்றத்தில் அஞ்சலி

நாடாளுமன்றத்தில் அஞ்சலி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் ராஜ்யசபா நடைபெற்றது. ராஜ்யசபாவில் மறைந்த இந்நாள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த உறுப்பினர்களுக்காக லோக்சபா, ராஜ்யசபாவில் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஓகி புயல் பாதிப்பு

ஓகி புயல் பாதிப்பு

இதைத்தொடர்ந்து ஓகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு லோக்சபாவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஓகி புயலால் 60 பேர் உயிரிழந்ததாகவும் 33 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

இந்த கூட்டத்தொடரில் 14 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The winter session of Parliament is beginning on December 13. Parliament is meeting from December 15 to January 5. Prime minister modi introduced new ministers in the sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X