திருப்பதி தேவஸ்தான அலுவலக கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான அலுவலக கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் வைரஸ் தாக்கியுள்ளதால் அந்த கம்ப்யூட்டர்கள் இயக்கம் பாதிக்கபப்ட்டுள்ளது. ஆனால் அவற்றிலுள்ள தகவல்கள் 'பேக் அப்' பைல்களில்ல் பாதுகாக்கப்பட்டுள்ளதால் ஏழுமையான் கோயில் நிர்வாகத்தில் எந்த சிக்கலும் ஏற்படாது என தேவஸ்தான நிர்வாக அலுவலர் கூறியுள்ளார்.

திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் டிக்கெட் புக் செய்வது, தங்கும் அறை பதிவு, பூஜைக்கான பதிவு என அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், தேவஸ்தான அலுவலகத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கம்யூட்டர்கள் செயல்படாமல் போனது. இதனால் ஆன்லைன் சேவையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 Tirupati Devasdanam office computers attacked by virus

இதுகுறித்து பேசிய தேவஸ்தான நிர்வாக அலுவலர் அனில் குமார் சிங்கால்,'' தேவஸ்தான அலுவலக கம்ப்யூட்டர்கள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் முடங்கியுள்ளன. ஆனால், நிர்வாகத்தின் தகவல்கள் அனைத்தும் 'பேக் அப்' பைல்கள் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்களுக்கு அளிக்கும் சேவையில் எந்த சிக்கலும் ஏற்படாது'' என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஹேக்கர்கள் வைரஸைப் பரப்பி கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tirupati Devasdanam office computers attacked by virus and it will be recovered said Devasdanam EO Anil kumar Singhal
Please Wait while comments are loading...