For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவரும் பாவம்தானே.. அவருக்கும் வியர்க்குமில்ல.. யப்பா.. இப்படி ஒரு பிரச்சாரத்தை யாருமே பண்ணலை இதுவரை

வெயில் அவதியால் புது பிரச்சார யுக்தியை கையில் எடுத்தார் அபிஷேக் பானர்ஜி!

Google Oneindia Tamil News

Recommended Video

    வெயில் கொடுமை....தனக்கு பதிலாக தனது சிலையை பிரச்சாரத்திற்கு அனுப்பிய வேட்பாளர்-வீடியோ

    கொல்கத்தா: ரொம்ப வெயிலா இருக்காம்.. மண்டையை பொளக்குதாம்.. வெளியே வரக்கூட முடியலயாம்.. அதனால எப்படி பிரச்சாரம் செய்றதுன்னு யோசித்தார் அந்த வேட்பாளர்.. தன்னை மாதிரியே ஒரு சிலையை செஞ்சு, அதை ஒரு வண்டியில ஏத்தி அனுப்பி வெச்சிட்டார்.. அவர் வேறு யாருமில்லை.. அபிஷேக் பானர்ஜிதான்!

    தர்ணாவே நடத்தினாலும், அந்த மேடையில் கொஞ்ச நேரம் கூட சும்மா இல்லாமல் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த மம்தா பானர்ஜியின் சொந்தக்காரர்தான் இந்த அபிஷேக் பானர்ஜி.

    "அமித் ஷா..! உங்களுக்கு தில் இருந்தா மேற்கு வங்கத்தில் தனியா நில்லுங்க, பார்க்கலாம்" என்று சவால் விட்டாரே.. இதே அபிஷேக்தான்!

    இதை விட கொடுமை என்னங்க வேணும்.. இந்தியாவின் மிக பெரிய தொகுதி வாக்காளர்களுக்கு விடப்பட்ட சவால்!இதை விட கொடுமை என்னங்க வேணும்.. இந்தியாவின் மிக பெரிய தொகுதி வாக்காளர்களுக்கு விடப்பட்ட சவால்!

    சிலை

    சிலை

    இவர் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடுகிறார். வெயில் அங்கு கொளுத்துவதால் எல்லா இடங்களுக்கும் இவரால் போய் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அதனால் தன்னைபோலவே ஒரு சிலையை செய்தார்.

    வணக்கம்

    வணக்கம்

    ஓட்டு கேட்டு வருபவர்கள் எப்படி இருப்பார்களோ அதே போல அந்த சிலையை ரெடி பண்ணினார். அதாவது, கைகளை வணக்கம் வைக்கிறபடி குவித்துவிட்டார். கழுத்து நிறைய மாலைகளை சிலைக்கு போட்டுவிட்டார். இப்போது பிரச்சார வேனில் ஏற்றினார். வேனில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளும் ஏறிக் கொண்டனர்.

    குழம்பும் மக்கள்

    குழம்பும் மக்கள்

    இப்போது செல்லும் இடமெல்லாம் அபிஷேக்குக்கு வாக்கு கேட்டு கோஷம் போட்டு வருகிறார்கள். "எங்கடா வேட்பாளரை காணோம்" என்று மக்கள் தேடினால், வேட்பாளர் வித்தியாசமாக வேனில் நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு கை காட்டுவதா, வேணாமா? வணக்கம் வைப்பதா, வேணாமா, என்று குழம்பி வருகின்றனர் பொதுமக்கள்!

    வியர்க்கும்ல

    இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் பதிவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, "ஓட்டு கேட்கக்கூட மக்களை சந்திக்காத இவர்களா, நாளைக்கு வெற்றி பெற்ற பிறகு பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க போறாங்க?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதுவாவது பரவாயில்லை.. இன்னொருத்தர், "அவருக்கும் வியர்க்கும்ல" என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

    English summary
    TMC Candidate Abhishek Banarjee uses his statue campaigning due heavy heat in West Bengal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X