டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா.. நாளை தீர்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குக்கர் சின்னம் கேட்டு மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரை ஒதுக்கக்கோரிய டிடிவி தினகரன் வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட இருக்கிறது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அபாரமாக வெற்றி பெற்றார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில் தனக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்றார்.

Tomorrow Delhi High Court will give the verdict TTV Dinakaran seeking cooker symbol case

மேலும் தனது அணிக்கு அதிமுக அம்மா அணி என்ற பெயரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் டிடிவி தினகரன் தலைமையிலான அணிக்கு கட்சிப் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. டிடிவி தினகரன் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாததால் கட்சியின் பெயர் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த வழக்கில் தினகரன் தரப்பு, முதல்வர் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் தரப்பு வாதங்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் நாளை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Delhi High Court will give the verdict of the case filed by TTV Dinakaran for allotting the name of the ADMK Amma and cooker symbol to his team tomorrow.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற