For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: 23 பேருக்கு தண்டனை விதித்த சிபிஐ கோர்ட்

By Siva
Google Oneindia Tamil News

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 23 பேருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்தபோது பல கோடி ரூபாய் அளவுக்கு மாட்டுத் தீவன ஊழல் நடைபெற்றது. இது குறித்த வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குடன் தொடர்புடைய அதாவது 1981ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை டொரன்டா கருவூலத்தில் இருந்து ரூ.7.06 கோடி முறைகேடாக எடுத்த வழக்கு உத்தரகண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்ந வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 பேரை விடுவித்தது. மேலும் 23 பேருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தும், ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.

பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் தனி மாநிலமாக பிரியும் முன்பு 1996ம் ஆண்டு இந்த மாட்டுத் தீவன ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் தனி மாநிலமாக்கப்பட்டபோது மாட்டுத் தீவன ஊழல் குறித்த 54 வழக்குகள் இங்கு மாற்றப்பட்டன.

பல சிபிஐ நீதிமன்றங்கள் மாட்டுத் தீவன ஊழல் குறித்த 47 வழக்குகளுக்கு இதுவரை தீர்ப்பளித்துள்ளன. அதில் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் 5 வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A CBI court in Ranchi on Saturday convicted 23 people and sentenced them to three to five years imprisonment in a multi-crore rupee fodder scam case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X