மாலத்தீவில் இந்திய செய்தியாளர்கள் 2 பேர் கைது.. தொடரும் அரசியல் குழப்பத்தால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாலே: மாலத்தீவில் இந்திய செய்தியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ எஃபி நிறுவனத்துக்காக பணியாற்றிய இந்திய செய்தியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட 9 பேரை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டது. அதனை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்க மறுத்துவிட்டார்.

Two journalists arrested in Maldives

அத்துடன், கடந்த திங்கள் கிழமை முதல் 15 நாட்களுக்கு அவசர நிலையையும் அதிபர் அப்துல்லா யாமீன் பிரகடனப்படுத்தினார். அவசர நிலையை பிரகடனப் படுத்திய சில மணி நேரங்களில் முன்னாள் அதிபர் அப்துல் கயூம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் சயீது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் மாலத்தீவில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் மாலத்தீவில் இந்திய செய்தியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ எஃபி நிறுவன இந்திய செய்தியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two journalists has been arrested in Maldives. AF news reporters arrested in Maldives.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற