மும்பையில் ஒரே பாதையில் எதிரெதிரே மோனோ ரயில்கள்... பெரும் விபத்து தவிர்ப்பு!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்பையில் ஒரே தடத்தில் இரண்டு மோனோ ரயில்கள் நேருக்கு நேர் வந்ததால் பெரும் விபத்து ஏற்பட இருந்தது. ஆனால், பயணிகள் கூச்சலிட்டதால் ரயில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்துத் தவிர்க்கப்பட்டது.

மும்பை செம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு மின்சாரம் இல்லாத காரணத்தால் அங்கிருந்து இயக்கப்படும் மோனோ ரயில் பாதையில் ரயில் ஒன்று பழுதடைந்து நின்றிருக்கிறது. மின்சாரம் பல மணி நேரம் இல்லாத காரணத்தால் ரயில் அங்கேயே நின்றிருக்கிறது.

அப்போது அதே பாதையில் வடலா ரயில் நிலையத்தில் இருந்து இன்னொரு மோனோ ரயில் வந்தது. மின்சாரம் இல்லாததால் பழுதாகி நின்ற ரயில் அப்பாதையில் நிற்பது தெரியவில்லை.

 பயணிகள் மீட்பு

பயணிகள் மீட்பு

இதனால் இரு ரயில்களும் மோத இருந்தன. ஆனால் விபத்து ஏற்படாவண்ணம் ரயில் தடுத்து நிறுத்தப்பட்டு, ரயிலில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என மும்பை மெட்ரோபொலிடன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இரவில் நோ சர்வீஸ்

இரவில் நோ சர்வீஸ்

மேலும் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய நேற்று இரவு அப்பாதையில் ரயிவே சேவை நிறுத்தப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இன்று முதல் மீண்டும் ரயில் சேவை

இன்று முதல் மீண்டும் ரயில் சேவை

மேலும், செம்பூர் ரயில்நிலையத்தில் பழுதாகி நிற்கும் மோனோ ரயிலை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அங்கு மின்சாரம் வருவதற்கு மூன்று மணி நேரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும், மோனோ ரயில் சேவை இன்று காலையில் இருந்து தொடங்கும் எனவும் கூறியுள்ளனர்.

 மீண்டும் மீண்டும் ஏற்படும் கோளாறு

மீண்டும் மீண்டும் ஏற்படும் கோளாறு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இதேபோல் இரண்டு முறை மோனோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அந்தேரி - வெர்சோவா ரயில் பாதையில் ஒருமுறை இதேபோல் நேர்ந்துள்ளது. கடந்த மே மாதம் வடலா- பக்திபார்க் ரயில்தடத்தில் இதேபோல் கோளாறு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Mumbai mono railway track two mono train came in same track and massive accident may happen if they hot on. Fortunately one of the train stopped.
Please Wait while comments are loading...