நாளை மறுநாளைக்குள் நீதிபதிகளுக்குள் கருத்தொற்றுமை: அட்டார்னி ஜெனரல் வேணுகோபால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் வரும்திங்கட்கிழமை அன்றுகருத்து ஒற்றுமை ஏற்படும் என்று அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்மேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன்கோகாய், மதன்லோகூர்உள்ளிட்ட நான்குபேர்பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

 Unity among SC judges will return by Monday says Attorney Generalattorney

உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்றும், தலைமைநீதிபதி பாராபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகளே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது மத்திய அரசு மற்றும் நீதித்துறை அமைச்சகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.

பூதாகரமாக வெடிக்கப்பட்ட இந்தவிவகாரம் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அமுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அட்டார்னி ஜெனரல், வரும் திங்கட்கிழமை அன்று கருத்து வேறுபாடு உள்ள அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஒன்றாக இணைவார்கள் என்று தெரிவித்தார்.

அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த நீதிபதிகள் இப்பிரச்சனையை மேலும் வளர்க்க மாட்டார்கள் என்றுதாம் நம்புவதாக வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை அதிருப்தியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்குபேரையும் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா சந்திப்பார் என்றும் கருதப்படுகிறது.

வழக்குகளை ஒதுக்குவதில் மிகுந்த பாராபட்சம் காட்டப்படுவது தான் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது இருக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Unity among SC judges will return by Monday says Attorney General Venugopal. And also he said there was plan of chief justice and discontent judges

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற