For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத மோதல்களில் உ.பி.க்கு முதலிடம்- குஜராத்துக்கு 5வது இடம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் நடப்பு ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் மத மோதல்கள் அதிகம் நிகழ்ந்துள்ளதாகவும் இந்த பட்டியலில் குஜராத் மாநிலம் 5வது இடத்தில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் குஜராத், உத்தரப்பிரதேச மத மோதல் சம்பவங்களும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. குஜராத்தில் கடந்த 12 ஆண்டுகளாக எந்த ஒரு மத மோதல் சம்பவமும் இல்லை என்று அம்மாநில முதல்வர் மோடி பேசிவருகிறார். அத்துடன் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி அரசுதான் மக்களை மதத்தின் பேரால் பிரித்து கலவரத்தை தூண்டி விடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களோ குஜராத்தில் மத மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் நாட்டில் மத மோதல் நடைபெறும் மாநிலங்களில் குஜராத் 5வது இடத்தில் இருக்கிறது என்றும் கூறுகிறது. உள்துறை அமைச்சக புள்ளி விவரம்:

உ.பி.யில் 247 சம்பவங்கள்.

நடப்பாண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 247 மத மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 77 பேர் பலியாகியுள்ளனர். 360 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 118 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 39 பேர் பலியாகி இருக்கின்றனர். 500 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா, ம.பி.

இதற்கு அடுத்த மகாராஷ்டிராவில் 88 மத மோதல் சம்பவங்களும் மத்திய பிரதேசத்தில் 84 சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில் முறையே 12 பேரும் 11 பேரும் பலியாகி உள்ளனர்.

4வது இடத்தில் கர்நாடகா

மத மோதல் நிகழும் மாநிலப் பட்டியலில் கர்நாடகாவுக்கு 4வது இடம். இங்கு நடப்பாண்டில் 73 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 235 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

5வது இடத்தில் குஜராத்

இப்பட்டியலில் குஜராத் 5வது இடத்தில் இருக்கிறது. மொத்தம் 68 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் 10 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 184 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு குஜராத்தில் 57 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 5 பேர் பலியாகி உள்ளனர். 201 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பீகார், ராஜஸ்தான்

இதைத் தொடர்ந்து பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. பீகாரில் 63 மத மோதல்களில் 7 பேர் பலியாகி உள்ளனர். ராஜஸ்தானில் 52 சம்பவங்களில் 2 பேர் பலியானதாக உள்துறை அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Elections 2014 is almost equivalent to a mudslinging match, the political parties are digging up dirt on their opponents to take them down this election season. BJP’s PM candidate may have n immaculate image as far as corruption is concerned but the blot of 2002 Gujarat riots are hard for Modi to shake off. Narendra Modi has been targeted over the riots for over a decade, he is strongly criticised over his incompetence to take stock of the situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X