For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஞானபீட பரிசு வென்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி காலமானார்! பிரதமர் இரங்கல்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: கன்னட இலக்கியப் படைப்பாளியும், நாட்டின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட பரிசு வென்றவருமான யு.ஆர்.அனந்தமூர்த்தி நேற்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 82.

சிறுநீரகம் செயலிழந்ததன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தார் யு.ஆர்.அனந்தமூர்த்தி.

10 நாட்களுக்கு முன்பாக காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று இவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து அவர் காலமானார்.

ஞானபீட விருது

ஞானபீட விருது

உடுப்பியில் உள்ள ஷிமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளியில் பிறந்த யு.ஆர்.அனந்தமூர்த்தி, கர்நாடகா எழுத்தாளர்கள் பெற்ற ஞானபீட விருது வரிசையில் 6வது படைப்பாளி ஆவார். 1994ஆம் ஆண்டு இவருக்கு இந்த உயரிய விருது அளிக்கப்பட்டது.

சம்ஸ்காரா நாவல்

சம்ஸ்காரா நாவல்

இவர் 1965ஆம் ஆண்டு எழுதிய சம்ஸ்காரா என்ற நாவல் அதன் நவீனத்துவத்திற்காக இலக்கிய அரங்கில் விமர்சகர்களின் பாராட்டுதல்களை பெற்றது.

திரைப்படமான நாவல்

திரைப்படமான நாவல்

இது பின்னர் திரைப்படமாக உருவாக்கப்பட்டு புதிய சினிமாவுக்கான புதிய போக்கை தீர்மானிக்கும் படமாக அமைந்தது.

சிறந்த இலக்கியவாதி

சிறந்த இலக்கியவாதி

இவருடைய பிரபலமான பிற படைப்புகள் கதஷ்ரத்தா, பாரதிபுரா, அவஸ்தை, பாவா ஆகியவையும் விமர்சகர்கள் கவனத்தை ஈர்த்த சிறந்த படைப்புகளாகும். பல சிறுகதைகளையும் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

மோடி பிரதமராக எதிர்ப்பு

மோடி பிரதமராக எதிர்ப்பு

2014 நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக இவர் நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டைவிட்டு வெளியேறுவேன் என்று கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியது.

மோடி இரங்கல்

மோடி இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி இவரது மறைவையொட்டி டிவீட் செய்துள்ளார்: "ஸ்ரீ யு.ஆர். அனந்தமூர்த்தியின் மறைவு கன்னட இலக்கியத்திற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல் தகனம்

உடல் தகனம்

அனந்த மூர்த்தியின் உடல் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின்னர் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

English summary
Jnanpith award winning litterateur UR Ananthamurthy has passed away in a Bangalore hospital on Friday. He was 81.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X