Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யாவால் "வைரத்துக்கே" வந்த சிக்கல்.. குஜராத்தில் 15 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்? என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: இந்தியாவுக்கு ரஷ்யாவில் இருந்து 90 சதவீத பட்டை தீட்டப்படாத வைரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக வைர இறக்குமதி பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் உருக்குலைந்துள்ளன. ஏராளமான பொதுமக்கள் பலியாகி உள்ளனர். பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர்.

இந்த போர் நடவடிக்கையை கண்டித்து உக்ரைன் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இருப்பினும் ரஷ்யா போர் நடவடிக்கையில் இருந்து பின்வாங்கவில்லை.

பொருளாதார தடைகள்

பொருளாதார தடைகள்

இதனால் ரஷ்யாவை அனைத்து வகைகளிலும் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. இதனால் ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. முதலில் கச்சா எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட சில துறைகளில் மட்டும் இருந்த பொருளாதா தடை தற்போது வெவ்வேறு துறைகளுக்கும் பரவி வருகிறது.

வைர நிறுவனம் மீது தடை

வைர நிறுவனம் மீது தடை

அந்த வகையில் தற்போது வைர ஏற்றுமதி நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பியுள்ளது. அதாவது ரஷ்ய அரசின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் அல்ரோசா வைர ஏற்றுமதி நிறுவனம் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் உலகில் பல நாடுகளுக்கு பட்டை தீட்டப்படாத வைரங்களை அனுப்பிய நிலையில் வரும் நாட்களில் இதை மேற்கொள்ள முடியாது. இதன்மூலம் இந்தியாவில் வைர தொழில் பாதிக்கப்படுவதுடன் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

90 சதவீதம்

90 சதவீதம்

காரணம் என்னவென்றால் இந்தியாவை பொறுத்தவரை குஜராத் மாநிலத்தில் வைரம் சார்ந்த தொழில்கள் அதிகம் நடக்கிறது. மும்பையிலும் குறிப்பிடும் படியாக இந்த தொழில் நடைபெற்று வருகிறது. இங்கு வைரம் பட்டை தீட்டுதல், நகைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக ஆண்டுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்டை தீட்டப்படாத வைரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் 90 சதவீத வைரங்கள் ரஷ்யாவின் அல்ரோசா நிறுவனத்தில் இருந்து பெறப்படுகிறது.

இறக்குமதிக்கு சிக்கல்

இறக்குமதிக்கு சிக்கல்

இதன்மூலம் அங்கிருந்து வைரத்தை இந்தியா இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதியாளர் மேம்பாட்டு கவுன்சில் மண்டல அலுவலம்(GJEPC) கூறுகையில், ‛‛ரஷ்யாவின் வைர நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு பட்டை தீட்டப்படாத வைரங்கள் இறக்குமதி செய்ய முடியாது. இதனால் மாற்று வழியை ஆராய வேண்டியுள்ளது'' என கூறியுள்ளது.

ஏற்றுமதி பாதிப்பு

ஏற்றுமதி பாதிப்பு

இதுபற்றி மண்டல அலுவலக தலைவர் தினேஷ் நவடியா கூறுகையில், ‛‛உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் ரஷ்யாவில் இருந்து சர்வதேச சந்தைகளுக்கான வைர ஏற்றுமதி ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவும் பொருளாதார தடையை விதித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து பெரும்பாலான உலகளாவிய நிறுவனங்கள் ரஷ்ய வங்கி மூலம் மேற்கொண்ட பணபரிவர்த்தனைகளை நிறுத்தின. இதனால் இந்திய வைர தொழிலதிபர்கள் துபாய் மற்றும் பெல்ஜியம் மற்றும் இந்தியாவில் உள்ள சில தனியார் துறை வங்கிகள் மூலம் பணம் செலுத்தி வைரம் பெற்றனர்.

அமெரிக்காவுக்கு 70 சதவீதம்

அமெரிக்காவுக்கு 70 சதவீதம்

தற்போது நேரடியாக ரஷ்யாவின் வைர நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால் துபாய், பெல்ஜியம் வங்கிகள் வழியாக பணம் செலுத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பட்டை தீட்டப்பட்ட வைரம், நகைகள் என 70 சதவீதம் அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் இருந்து பட்டை தீட்டப்படாத வைரம் வாங்கும்பட்சத்தில் அதை பட்டைத தீட்டி அமெரிக்காவுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மாற்று வழியை தேட வேண்டி உள்ளது.

எவ்வளவு தொழிலாளர்கள் பாதிப்பு

எவ்வளவு தொழிலாளர்கள் பாதிப்பு

குஜராத்தில் மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 15 லட்சம் தொழிலாளர்கள் வைரம் சார்ந்த தொழில்களை நம்பியுள்ளனர். தற்போதைய தடையால் இவர்கள் அனைவரும் பாதிக்கப்படலாம்'' என்றார். இதற்கிடையே சில நிறுவனங்களில் தற்போதே தொழிலாளர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டு, வாரம் 2 முறை விடுப்பு அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்கான பட்டை தீட்டப்படாத வைரங்கள் தட்டுப்பாட்டால் வேலையிழப்பு மட்டும் ஏற்படாது. மாறாக வைர நகைகளுக்கான தட்டுப்பாடும், வைரம், வைர நகைகளின் விலையும் உயர வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+