For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பா.ஜ.க ஆட்சி நடந்து வரும்... உத்தரகண்ட் முதல்வர் திடீர் ராஜினாமா... என்ன காரணம் தெரியுமா?

Google Oneindia Tamil News

டேராடூன்: பாஜக ஆட்சி நடந்தும் உத்தரகாண்டில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இன்று திடீரென தனது பதிவியை ராஜினாமா செய்தார்.

எம்.எல்.ஏக்கள் சிலர் திரிவேந்திர சிங் ராவத் சிங்கின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்ததால் பாஜக மேலிடம் உத்தரவின்பேரில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

சுமார் 4 ஆண்டுகளாக உத்தரகாண்ட் முதல்வராக ஆக்கிய கட்சி தலைமைக்கு நன்றி. தனக்கு ஆதரவளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி என்று திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

உத்தரகாண்டில் பாஜக ஆட்சி

உத்தரகாண்டில் பாஜக ஆட்சி

உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் இருந்து வந்தார். எம்.எல்.ஏக்கள் சிலர் திரிவேந்திர சிங் ராவத் சிங்கின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. முதல்வரை மாற்ற வேண்டும் என்று பாஜக தலைமையிடம் அவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிது. இதனை தொடர்ந்து தலைமையிடம் உத்தரவின் பேரில் பாஜக துணைத் தலைவர் ராமன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

ராஜினாமா செய்தார்

ராஜினாமா செய்தார்

இதனையடுத்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் திரிவேந்திர சிங் ராவத்தை அழைத்து பேசினார்கள். இதன் மூலம் திரிவேந்திர சிங் ராவத் பதவியை ராஜினமா செய்வார் என்று தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே திரிவேந்திர சிங் ராவத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

மாநில கவர்னர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது;- மாநில முதல்வராக பதவி வகிப்பேன் என்று நான் நினைத்து பார்த்தது கூட கிடையாது. கட்சி தற்போது முதல்வராக பணியாற்ற வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது.

அடுத்த முதல்வர் யார்?

அடுத்த முதல்வர் யார்?

சுமார் 4 ஆண்டுகளாக உத்தரகாண்ட் முதல்வராக ஆக்கிய கட்சி தலைமைக்கு நன்றி. தனக்கு ஆதரவளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே பாஜகவில் ஒவ்வொரு முடிவும் எடுக்கப்படுகிறது என்று திரிவேந்திர சிங் ராவத் கூறினார். அடுத்த முதல்வர் ரேஸில் தன் சிங் ராவத் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In BJP-ruled Uttarakhand, Chief Minister Trivendra Singh Rawat today abruptly resigned from his post
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X