எருமை மாடு மீது மோதல்.. சேதமடைந்த வந்தே பாரத் ரயில்.. மாட்டு உரிமையாளர் மீது வழக்கு பதிவு
அகமதாபாத்: குஜராத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரெயில் எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி சேதமடைந்தது. இந்தநிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மாட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயை நவீனப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி,
'வந்தே பாரத்' ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
மொத்தம் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மோடி தொடங்கி வைத்தார்
இந்தியாவில் முதல் முதலாக டெல்லி - வாரணாசி இடையே ‛வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு காந்திநகர் - மும்பை இடையே 3-வது வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த மாதம் 30 ஆம் தேதி பிரதமர் மோடி, காந்தி நகர் - மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார்.

விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 52 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ரயிலில் அதிநவீன சொகுசு வசதிகளும் உள்ளன. காந்தி நகரில் இருந்து மும்பைக்கு செல்ல வெறும் 6 முதல் 7 மணி நேரம் மட்டுமே ஆகும். இந்த ரயில் சேவை தொடங்கி ஒருவாரம் ஆகியுள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை இந்த ரயில் விபத்தில் சிக்கியது.

4 எருமை மாடுகள் இறந்தன
வத்வா மற்றும் மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் வந்த 4 எருமை மாடுகள் மீது ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 4 எருமை மாடுகள் அடிபட்டு இறந்தன. விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதம் அடைந்தது. விபத்து ஏற்பட்ட போது 140 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

4 மாடுகளின் உரிமையாளர்கள் மீது
சேதம் அடைந்த ரயிலின் முன்பகுதி மற்றும் இன்ஜின் பகுதியை சில மணி நேரங்களில் சீர் செய்து ரயில்வே ஊழியர்கள் அசத்தினர். இதனிடையே, எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அகமதாபாத் ரயில்வே டிவிஷன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''அகமதாபாத்தின் வத்வா - மணி நகர் இடையே ரயில்வே பாதையின் குறுக்கே வந்த 4 மாடுகளின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

6 மாதம் சிறை
இன்னும் உரிமையாளர்கள் அடையாளம் காணப்படவில்லை'' என்றார். ரயில்வே பாதுகாப்பு சட்டம் 1989, 147 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications