இந்திராகாந்தி குடும்பத்தின் புதிய பெண் வாரிசு 'அனுஷியா'!
டெல்லி: இந்திரா காந்தி குடும்பத்தில் புதிதாக ஒரு பெண் குழந்தை சேர்ந்துள்ளது. ஆம்... இந்திரா காந்தியின் பேரனும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

முன்னாள் பிரதமர், இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி, தற்போது மத்திய பாஜக அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மகனும் பாஜக எம்பியுமான, வருண்காந்திக்கும், யாமினி என்ற பெண்ணுக்கும், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வாரணாசி காமகோட்டீஸ்வரர் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கர்ப்பமுற்ற யாமினி டெல்லியிலுள்ள மருத்துவமனையொன்றில் சேர்க்கப்பட்டார். இன்று பிற்பகல் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. நிருபர்களிடம் இதுகுறித்து பேசிய வருண் காந்தி "அழகான பெண் குழந்தையால் நானும், எனது மனைவி யாமினியும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். பெண் குழந்தை பிறந்துள்ளதை நினைத்து எனது ஒட்டுமொத்த குடும்பமும் ஆனந்த கூத்தாடிவருகிறது.
எனது மகளுக்கு அனுஷியா என்று பெயரிட்டுள்ளோம்". இவ்வாறு வருண் காந்தி தெரிவித்தார். மறைந்த சஞ்சய்காந்தியின் சகோதரரான ராஜிவ்காந்தி குடும்பம் காங்கிரஸ் கட்சியை கட்டிக்காப்பாற்றி வரும் நிலையில், சஞ்சய்காந்தி குடும்பம் பாஜகவில் தங்களை அர்ப்பணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications