For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உம்மன்சாண்டி மீது எப்.ஐ.ஆர். போட உத்தரவிட்ட நீதிபதி திடீர் விருப்ப ஓய்வு கோரியதால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சோலார் பேனல் ஊழல் தொடர்பாக கேரளா முதல்வர் உம்மன் சாண்டி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட திருச்சூர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியான எஸ்.எஸ்.வாசன் தாம் விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக கேரளா உயர்நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நீதிபதி வாசன் அதிகார வரம்பை மீறி உம்மன்சாண்டி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதாக கேரளா உயர்நீதிமன்றம் விமர்சித்திருந்தது.

சோலார் பேனல் முறைகேட்டில் சிக்கி குற்றம் சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர், கேரள முதல்வருக்கு ரூபாய் 1.90 கோடியும், மின்சார துறை அமைச்சருக்கு ரூபாய் 40 லட்சமும் லஞ்சம் கொடுத்ததாக விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார். சரிதாவின் குற்றச்சாட்டை ஆதாரமாகக் கொண்டு முதல்வர் உம்மன் சாண்டி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்று திருச்சூரில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பி.டி.ஜோசப் என்பவர் புகார் அளித்திருந்தார்.

தனது புகாருக்கு ஆதாரமாக டிவிடி, சரிதா நாயர் அளித்த வாக்குமூலம் வெளியான நாளிதழ்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் ஜோசப் அளித்தார். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.வாசன் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, நிதி அமைச்சர் ஆர்யாடன் முகமது ஆகியோர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிபதி வாசனின் உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இன்று தடைவிதித்தது. மேலும், ஊழல் தடுப்பு விசாரணை நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாகவும் விமர்சனம் முன்வைத்திருந்தது.

இதையடுத்து, நீதிபதி எஸ்.எஸ்.வாசன் தாம் விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக கேரள உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ். வாசனுக்கு இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் மே மாதம் 31 ஆம் தேதிக்குப் பிறகு பதவியில் தொடர விருப்பமில்லை என அவர் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kerala

சோலார் பேனல் முறைகேடு வழக்கில் உம்மன் சாண்டி மீதான வழக்கினை விசாரணைக்கு கேரள உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. இதனையடுத்து திருச்சூர் ஊழல் தடுப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதியான எஸ்.எஸ்.வாசன் தன்னுடைய பதவியினை ராஜினாமா செய்

English summary
Soon after the Kerala High Court rapped his decision to order probe against Chief Minister Oommen Chandy, S.S.vasan resigned his post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X