For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டு மக்களிடம் வினோத் ராய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. விளாசும் கபில் சிபல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அம்பலமான வினோத் ராயின் பொய் கணக்கு...வீடியோ

    டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 1.76 லட்சம் கோடி இழப்பு என போலியான தகவலை அளித்த முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

    மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறி அப்போதைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கையளித்தார்.

    Vinod Rai should apologize to the nation former telecom minister Kapil Sibal

    அந்த அறிக்கையில், இழப்பு மதிப்பு ரூ.1.76 லட்சம் கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என கூறி குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

    இதுகுறித்து கபில் சிபல் கூறுகையில், 2ஜி வழக்கில், இழப்பு எதுவும் ஏற்படவில்லை என நான் முன்பிருந்தே கூறிவருகிறேன். அது உண்மையாகியுள்ளது. முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    வினோத் ராய்தான், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என கூறியிரு்தார்.

    English summary
    Vinod Rai(ex-CAG chief) should apologize to the nation as there was no wrongdoing in the case, as he was the reason for 2G confusions.says, Former telecom minister Kapil Sibal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X