கோஹ்லி ஆட.. அதை பார்த்து அனுஷ்கா குத்தாட்டம் போட.. திருமண வரவேற்பில் ஒரே கூத்துதான்- வீடியோ
Recommended Video

டெல்லி: காதலர்களான கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா நடுவே சமீபத்தில் இத்தாலியில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, டெல்லியிலுள்ள, தாஜ் பேலஸ், ஸ்டார் ஹோட்டலில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களுக்கு் கோஹ்லி தம்பதி அழைப்புவிடுத்திருந்தனர்.
இதையேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்று தம்பதிகளை வாழ்த்தினர்.
|
ஆஹா என்னா ஆட்டம்
கிரிக்கெட் வீரர்கள், ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரும், நட்சத்திர ஹோட்டல் வந்திருந்து, தம்பதிகளை வாழ்த்தினர். மற்ற இந்திய வீரர்கள், மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற உள்ள இந்தியா-இலங்கை அணிகள் நடுவேயான டி20 போட்டியில் பங்கேற்க சென்றுள்ளதால் அவர்களால் இதில் பங்குபெற முடியவில்லை.
|
இறங்கி குத்து
விராட் மற்றும் அனுஷ்காவுக்கு சப்யாசசி முகர்ஜி என்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஆடைகளை வடிவமைத்து கொடுத்திருந்தார். அவரும் ரிஷப்ஷனில் கலந்து கொண்டார். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மேடையில் தம்பதிகள் நின்றிருந்தனர். இருப்பினும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தம்பதிகள் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து பஞ்சாபி பாடலுக்கு அசத்தல் நடனமாடினர்.
|
அடடே அனுஷ்கா
கோஹ்லிதான் கலக்கல் நடனமாடினார் என பார்த்தால், அனுஷ்காவும் விடவில்லை. குத்தாட்டத்தில் பட்டையை கிளப்பினார். வாயில் காகிதத்தை வைத்தபடி அவர் போட்ட ஆட்டத்தால் அந்த இடம் முழுக்க ஒரே குதுகலமும் விசில் சத்தமுமாக இருந்தது.
|
கோஹ்லிக்குள் இப்படி ஒரு திறமையா
பஞ்சாபி பாடலுக்கு தேர்ந்த ஒரு நடன கலைஞரை போலவே கோஹ்லியும் அசத்தலாக ஆடினார். நடிகையான அனுஷ்காவுக்கு நடனம் பெரிய மேட்டர் இல்லை. ஆனால் கோஹ்லிக்குள் இப்படி ஒரு டான்சர் உள்ளாரா என்று வியக்கும் அளவுக்கு பெர்ஃபெக்டாக ஸ்டெப்புகளை போட்டார் அவர்.


Click it and Unblock the Notifications
