"விர்ஜின்"ன்னா என்ன தெரியுமா.. பீகார் அமைச்சரின் அடடே விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்னா: கன்னி என்ற சொல்லுக்கு திருமணமாகாத பெண் என்ற புதியதொரு விளக்கத்தை பீகார் சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரியில் பணி நியமனத்துக்கான உறுதிமொழி படிவத்தில் ஒரு வினோதமான கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அதாவது விண்ணப்பதாரர் திருமணமானவரா அல்லது கணவர், மனைவியை இழந்தவரா அல்லது கன்னி கழியாதவரா என்று அதில் கேட்டிருந்தனர். சிங்கிள் என அச்சிடுவதற்கு பதிலாக விர்ஜின் என அச்சிட்டுள்ளனர்.

விர்ஜின் என்றால் தெரியாதா

விர்ஜின் என்றால் தெரியாதா

இவர்களது ஆங்கில அறிவு குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சர்ச்சையும் வெடித்துள்ளது. சிலர், கன்னி கழியாதவர்களுக்கென்று சிறப்பு இடஒதுக்கீடு ஏதேனும் இருக்கா என்று கேட்டுள்ளனர்.

எத்தனை மனைவியர்

எத்தனை மனைவியர்

அதேபோல எத்தனை மனைவியர் உள்ளனர் என்ற கேள்வியும் அந்த உறுதிமொழி படிவத்தில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐக்கு கல்வி நிறுவனத்தின் மருத்துவக் கண்காணிப்பாளர் மனீஷ் மண்டல் விளக்குகையில், எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தின் விதிகளைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம். அரசு விதிமுறைகள், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளபடிதான் இந்த வார்த்தைகள் உள்ளன.அவர்கள் மாற்றினால் நாங்களும் மாற்றுவோம் என்று கூறியிருந்தார்.

இன்னொரு சர்ச்சை

இன்னொரு சர்ச்சை

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தாம் விளக்கம் அளிக்கிறோம் என்ற பெயரில் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் பீகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே.

விர்ஜின்னா திருமணமாகாதா பெண்ணாம்!

இதுகுறித்து அவர் கூறுகையில், விர்ஜின் என்றால் திருமணமாகாத பெண் என்று புதியதொரு விளக்கத்தை கூறியுள்ளார். பாஜக எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் கைகோத்துள்ள நிதிஷ்குமார் அரசு இந்த மருத்துவமனையின் சர்ச்சைக்குரிய விண்ணப்பம் குறித்து எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bihar Health Minister Mangal Pandey says that Virgin means Unmarriged girl. A term which was used in Medical sciences college marital status declaration form.
Please Wait while comments are loading...