For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாகா எல்லை தாக்குதல்: இந்தியாவை குறி வைத்து மிஸ்ஸாகிவிட்டது

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: வாகா எல்லையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் இந்திய பகுதியை குறிவைத்தது தவறுதலாக அந்த பக்கம் நடந்துள்ளதாம்.

பாகிஸ்தானில் வாகா எல்லையில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த 12 கிலோ வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தேசிய கொடியிறக்கத்தை பார்த்துவிட்டு திரும்பியவர்களில் 60 பேர் பலியாகினர், 200 பேர் காயம் அடைந்தனர். குண்டு பாகிஸ்தான் பகுதியில் வெடித்தது.

Wagah Border attacker's target was India but exploded in Pakistan due to miscalculation: Security experts

குருநானக்கின் பிறந்தநாளையொட்டி நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் இந்தியாவில் இருந்து லாகூரில் உள்ள தேவ் பிறந்த இடமான நான்கனா சாகேபுக்கு செல்வதற்கு முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஜுன்துல்லா, தாலிபான்களுடன் தொடர்புடைய ஜமாத்துல் அஹ்ரார் மற்றும் மஹர் மெஹ்சூத் ஆகிய தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன.

தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் இந்திய பகுதியை மனதில் வைத்து தான் தாக்குதலை நடத்தி இருக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய பாதுகாப்பு துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது,

இந்த தாக்குதல் பலத்த பாதுகாப்பு உள்ள இடத்தில் நடத்தப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் இஸ்லாமாபாத் இடையே உள்ள பிரச்சனையை பெரிதுபடுத்த நினைத்து நடத்தப்பட்டது. இந்திய பகுதியில் குண்டை வெடிக்கச் செய்து சேதம் ஏற்படுத்த நினைத்து தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

குண்டு பாகிஸ்தான் பகுதியில் வெடித்தாலும் இந்திய பகுதியில் சுமார் 2 கிமீ தூரம் வரை வெடிசத்தம் கேட்டுள்ளது.

English summary
According to our security experts in Delhi, Wagah border attack was carried with India in mind but the bomb exploded in Pakistan due to miscalculation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X