For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்க் ஜுக்கர்பர்குக்கு சம்மன் அனுப்புவோம்.. அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரிக்கை

இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் மக்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் பேஸ்புக் நிறுவனம் யாருக்கும் கொடுக்க கூடாது என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கு எச்சர

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மார்க் ஜுக்கர்பர்குக்கு சம்மன் அனுப்புவோம்- வீடியோ

    டெல்லி: இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் மக்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் பேஸ்புக் நிறுவனம் யாருக்கும் கொடுக்க கூடாது என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

    We are ready to send summon to Mark Zuckerberg says, Minister Ravi Shankar Prasad

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்திய பயனாளிகளின் தகவலும் திருடப்பட்டு இருக்கலாம் என்று பயம் நிலவுகிறது.

    இந்த நிலையில் பேஸ்புக்கின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறை மிகவும் பாதுகாப்பாக கவனமாக கண்காணிக்கப்படுகிறது என்றுள்ளார்.

    மேலும் ''இந்தியர்களின் தகவல்களை திருடுவது குறித்து பேஸ்புக் நிறுவனம் சிந்திக்கவே கூடாது. தகவல் தொழில்நுட்ப துறையில் நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம். ஏதாவது பிரச்சனை நடந்தால் மார்க் ஜுக்கர்பர்குக்கு சம்மன் அனுப்ப கூட தயாராக இருக்கிறோம்'' என்றுள்ளார்.

    English summary
    We are ready to send summon to Mark Zuckerberg says, Minister Ravi Shankar Prasad in Cambridge Analytica issue. Cambridge Analytica illegally used 50 million people accounts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X