For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்ம விருதுகளை அறிவிக்கவே இல்லை: உள்துறை அமைச்சகம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் பத்ம விருதுகள் பெற உள்ளனர் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது என்று செய்திகள் வெளியான. விருது பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரின் பெயர்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

We haven't announced Padma awards: Home ministry

மேலும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகர் சல்மான் கானின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான சலீம் கான், இயக்குனர் பிரசூன் ஜோஷி, பேராசிரியர் டேவிட் ப்ராலி, ஹாக்கி அணி கேப்டன் சர்தரா சிங், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, செஸ் வீரர் சசிகிரண் கிருஷ்ணன், குத்துச்சண்டை வீரர் சுஷீல் குமார், அவரது பயிற்ச்சியாளர் சத்பால், பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய், செய்தியாளர்கள் ரஜத் சர்மா, ஸ்வபன் தாஸ்குப்தா, ஹரி சங்கர் வியாஸ், மறைந்த நடிகர் பிரான் ஆகியோரின் பெயர்களும் பத்ம விருதுகள் பட்டியலில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பாடகி சுதா ரகுநாதன், இசையமைப்பாளர்கள் அனு மாலிக், இயக்குனர் ஜாஹ்னு பருவா, விஞ்ஞானிகள் அருணன், ஷிவ்குமார், எழுத்தாளர் மனோஜ் தாஸ் ஆகியோரும் பத்ம விருதுகள் பெற உள்ளனர் என்று கூறப்பட்டது.

இந்த விருதுகள் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது. விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பத்ம விருதுகள் இன்னும் அறிவிக்கப்படவே இல்லை என்றும், ஊடகங்களில் வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
Home ministry said that Padma awards for the year 2015 is yet to be announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X