For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலையில் பெண் கால்களைக் காண்பிப்பது அநாகரீகமானது.. மம்தாவுக்கு எதிராக பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

Google Oneindia Tamil News

கொல்கத்தா: சேலையில் பெண் கால்களைக் காண்பிப்பது அநாகரீகமானது எனவே தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா, பெர்முடா ஷார்ட்ஸ் அணியலாம் என்று கருத்து தெரிவித்தேன் என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தனது கருத்தை மீண்டும் ஆதரித்து விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து பேசிவருகிறார்கள். தனி மனித தாக்குதல்கள் சர்வ சாதாரணமாக அங்கு நடக்கிறது. அண்மையில் காலில் அடிபட்டு இருந்ததால் மம்தா பானார்ஜி காலில் காயம்பட்ட இடம் தெரியும்படி சேலை அணிந்திருந்தார்.

 West Bengal BJP chief Dilip Ghosh’s defends ‘wear bermudas’ comment against CM Mamata Banerjee

இதை விமர்சித்த பாஜக தலைவர் திலீப் கோஷ். மம்தா பானார்ஜி ஒரு கால் மூடியும் ஒரு கால் தெரியும் படி சேலை அணிந்திருக்கிறார். ஆனால் இன்னொருவர் பார்ப்பதற்காக இப்படி வைப்பதில்லை. அவர் சேலை அணிவதற்கு பதில் பெர்முடா ஷார்ட்ஸ் அணிந்தால் காலை நன்றாக காட்ட முடியும் என்று கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பலரும் திலீப் கோஷ்க்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தனது சர்ச்சை பேச்சை ஆதரித்தே மீண்டும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில். மம்தா எங்கள் முதல்வர், வங்காள கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு அவர் சரியான முறையில் செயல்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சேலையில் கால்கள் காட்டுவது பெண்களுக்கு பொருத்தமற்றது. மக்கள் ஆட்சேபிக்கின்றனர். நான் அதை ஆட்சேபிக்கத்தக்கதாகக் கண்டேன், அதனால் நான் அப்படி பேசினேன். காயமடைந்த காலைக் காட்ட முதல்வர் பெர்முடா ஷார்ட்ஸை அணியலாம்" இவ்வாறு கூறினார்.

English summary
After West Bengal BJP chief Dilip Ghosh’s ‘wear bermudas’ comment against CM Mamata Banerjee sparked outrage, he defended himself on Thursday by saying that it is “indecent” for a woman to show her legs while wearing a saree.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X