For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: வரும் சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம், பவானிபூர் என இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும் போட்டியிடவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

வரும் 2021ஆம் ஆண்டு மே மாதத்திற்குத் தமிழகம், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

தமிழகமும் மேற்கு வங்காளமும் பாஜக நுழைய முடியாத மாநிலங்களாகக் கருதப்பட்டு வந்தது. இதை உடைத்து, மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கேற்றவாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்களும் பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.

நந்திகிராமில் போட்டி

நந்திகிராமில் போட்டி

இந்நிலையில் இன்று நந்திகிராமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, "வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன். இது எனக்கு ராசியான இடம்" என்றார். 10 ஆண்டுகளுக்கு முன், மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வர அம்மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் முக்கிய காரணமாக இருந்தது. அந்தப் போராட்டம் முக்கியமாக நந்திகிராம் பகுதியிலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இரு தொகுதிகளில் போட்டி

இரு தொகுதிகளில் போட்டி

தொடர்ந்து பேசிய அவர், "இதற்காக பவானிபூர் மக்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். நான் உங்களுக்கு நல்ல வேட்பாளரை அறிவிப்பேன். நந்திகிராம், பவானிபூர் தொகுதிகள் எனது சகோதரிகளைப் போன்றவை. முடிந்தால் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவேன்" என்றார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.

சுவேந்து ஆதிகாரி

சுவேந்து ஆதிகாரி

தரிணாமுல் காங்கிரஸில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சுவேந்து ஆதிகாரி. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் 40 தலைவர்களுடன் உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்றவர். சுவேந்து ஆதிகாரி பாஜக தனது முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது தொகுதியிலே போட்டியிடவுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

பாஜக பதிலடி

பாஜக பதிலடி

பாஜகவை வாஷிங் பவுடர் பஜாபா என்று விமர்சித்த அவர், "கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கித் தருவதாக உறுதி அளித்து பாஜக தற்போது ஆட்களைச் சேர்த்து வருகிறது. ஆனால் இது தேர்தல் நேரத்தில் பலன் அளிக்காது" என்று விமர்சித்தார். இதற்குப் பதிலளித்த மேற்கு வங்க பாஜக பொறுப்பாளர் அமித் மால்வியா, "பாஜகவின் அரசியல் மம்தாவுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் 10 ஆண்டுகளில் முதல்முறையாக அவர் தொகுதி மாறி போட்டியிடுகிறார்" என்றார்.

English summary
Bengal Chief Minister Mamata Banerjee today announced that she will contest the Bengal election from Nandigram, the epicenter of a farmers' movement that propelled her to power in the state 10 years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X