For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்குவங்கத்தில் சமையல்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த ஆஸ்திரேலியர் கைது!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் சமையல்காரியான பெண் ஒருவரை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடியா மாவட்டம் நபாட்விப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த ஆர்தர் அரேல் ஸ்மித் என்ற ஆஸ்திரேலியர்.

அவர் அங்குள்ள "இஸ்கான்" எனப்படும் "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" இயக்கத்தில் இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு காட்டி வந்தார்.

அவரது வீட்டில் சமையல் வேலை செய்யும் ஒரு பெண், ஆர்தர் அரேல் ஸ்மித் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

"நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு வேண்டாத சிலர் அந்த பெண்ணை தூண்டிவிட்டு, என் மீது பொய்ப் புகார் தரும்படி வற்புறுத்தியதால் நான் குற்றவாளியாக்கப்பட்டுள்ளேன்"என்று கூறும் ஆர்தர் அரேல் ஸ்மித்திடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாள் விசாரணை காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

English summary
Australian national man molested a cooking woman in West Bengal. Police arrested him into custody and investigating about the petition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X