For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: வழக்கம் போல் விமானி விமானம் தரையிறங்கப் போவதை அறிவித்தார். அப்போது விமானம் ஓடுபாதையை அடைந்ததும், திடீரென முன்பாகம் பயங்கரமாக உடைந்து பிளந்தது என்று கோழிக்கோடு விமான விபத்தில் தப்பிய பயணி ஒருவர் தெரிவித்தார்.

Recommended Video

    Survivor Recalls Moments After Kerala Plane Crash | Oneindia Tamil

    போயிங் 737-800 என்ற விமானம் துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டிற்கு வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் வந்தது. அந்த விமானத்தில் பறந்தது. 174 வயது வந்த பயணிகள், 10 கைக்குழந்தைகள், இரண்டு விமானிகள் மற்றும் நான்கு விமான பணிப்பெண்கள் இருந்தனர்.

    விமானம் வந்து கொண்டிருந்த சமயத்தில் கோழிக்கோட்டில் மிக கனமழை பெய்து கொண்டிருந்தது. விமான நிலையம் முழுவதும் தண்ணீர் அதிகமாக இருந்தது. விமானம் முதல் முறையாக தரையிறங்க முயன்ற போது வானிலை நிலவரத்தால் தரையிறங்க முடியவில்லை. இதனால் இரண்டாவது முறையாக தரையிறங்க விமானம் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக பிளந்தது.

    கோழிக்கோடு ஏர்போர்ட்டில் இதுதான் நடந்திருக்க வேண்டும்.. காரணங்களை கூறும் முன்னாள் விமானப்படை அதிகாரிகோழிக்கோடு ஏர்போர்ட்டில் இதுதான் நடந்திருக்க வேண்டும்.. காரணங்களை கூறும் முன்னாள் விமானப்படை அதிகாரி

    120 பேர் காயம்

    120 பேர் காயம்

    அந்த விபத்தில் இரு விமானிகள், குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேரின் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கேரளாவின் மூத்த போலீஸ் அதிகாரி அப்துல் கரீம் தெரிவித்தார். விபத்தில் உயிர் தப்பிய ரஞ்சித் பனங்காட் என்பவர் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    நான் துபாயில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பிளம்பராக வேலைபார்த்து வந்தேன். ஆனால் அங்கு வேலையை இழந்ததால், மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். விமானம் கோழிக்கோட்டை நெருங்கியது. விமானம். தரையிறங்குவதற்கு முன் பைலட் வழக்கமான அறிவிப்பை வெளியிட்டார், விமானம் ஓடுபாதையை சென்றடைந்த சில நிமிடங்களில், அதன் மூக்கு பகுதி உடைந்தது.

    கூச்சலிட்டனர்

    கூச்சலிட்டனர்

    அப்போது மோதல் காரணமாக பெரிய சத்தம் ஏற்பட்டது, மக்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். விமானத்தின் அவசரமாக வெளியேறும் வழியாக நுழைந்து வெளியேறினர். அதே வழியில் மற்ற பயணிகளை பின் தொடர்ந்து வந்தேன். ஏராளமான பயணிகள் ரத்தம் வழிந்த நிலையில் வந்து கொண்டிருந்தனர். என்ன நடந்தது என்பதை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்த முயற்சிக்கையில், என் உடல் நடுங்குகிறது." இவ்வாறு கூறினார்.

    ஏற்கனவே விபத்து

    ஏற்கனவே விபத்து

    சனிக்கிழமை காலை மழை நின்ற பின்னர் புலனாய்வுப் பணியகம் விமான மீட்பு பணிகளைத் தொடங்கியது. விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை மீட்டனர். முன்னதாக ஒரு வருடம் முன்பு அதே விமான நிலையத்தில் இதேபோன்ற ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியபோது அதன் வால் பகுதி தாக்கியது. அந்த விமானத்தில் இருந்த 180 பயணிகளில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

    எப்படி இருக்கிறது

    எப்படி இருக்கிறது

    கோழிக்கோட்டின் 2,850 மீட்டர் (9,350 அடி) ஓடுபாதை ஒரு தட்டையான மலைப்பகுதியில் உள்ளது, இருபுறமும் ஆழமான பள்ளத்தாக்குகள் 34 மீட்டர் (112 அடி) வீழ்ச்சியில் முடிவடைகின்றது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்ட விபத்து குறித்த அறிக்கையில், விமானம் "மழை காரணமாக ஓடுபாதையை ஓவர்ஷாட் செய்து சரிவில் இருந்து கீழே சென்றது. பாதிப்பின் காரணமாக இரண்டு துண்டுகளாக உடைந்தது" என்றார்.

    மழை நீர் தேக்கம்

    மழை நீர் தேக்கம்

    ஓடுபாதையில் விரிசல், நீர் தேங்கியிருந்தது மற்றும் அதிகப்படியான ரப்பர் இருப்பபு ஆகிய பல்வேறு முக்கியமான பாதுகாப்பு குறைபாடுகளை" கண்டுபிடித்து நாட்டின் விமான ஒழுங்குமுறை ஆணையம் 2019 ஆம் ஆண்டில் கோழிக்கோடு விமான நிலைய இயக்குநரிடம் விளக்கம் கோரியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மறுததார். விமான ஒழுங்குமுறை ஆணையம் சொன்ன அனைத்து பிரச்சனைளும் தீர்க்கப்பட்டன என்றார். இந்த விமான விபத்து தொழில்நுட்ப பிழை அல்லது மனித பிழையின் விளைவாக இருந்ததா என்பதை இந்த நேரத்தில் சொல்வது கடினம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    English summary
    What Happened Seconds Before Kozhikode plan Crash : Passenger Renjith Panangad said the pilot made a regular announcement before landing, and moments after the plane hit the runway, it nosedived.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X