இமாச்சல பிரதேச தேர்தல் தேதி அறிவிப்பு.... பாஜக, காங்கிரஸ் பலம் எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : இமாச்சல பிரதேச மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பலம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 68 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட இமாச்சல பிரதேசத்திற்கு நவம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் டிசம்பர் 18ல் அறிவிக்கப்படுகிறது.

இதே போன்று 182 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத் தேர்தல் தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்துடன் இரண்டு மாநிலங்களிலும் ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது பாஜக, காங்கிரஸ் இடையேயான போட்டியை அதிகரித்துள்ளது.

 பொருளாதார மந்த நிலை

பொருளாதார மந்த நிலை

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு விவகாரத்தால் இந்திய பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது. ஜிஎஸ்டி வரியால் பொருட்களின் உற்பத்தியும் குறைந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில் மாற்றுத் தலைமை தேவை என்ற பிரச்சாரத்துடன் காங்கிரஸ் மக்களை அணுகி வருகிறது.

 இரு கட்சிகளுக்கும் சவால்

இரு கட்சிகளுக்கும் சவால்

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு விவகாரத்தால் இந்திய பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது. ஜிஎஸ்டி வரியால் பொருட்களின் உற்பத்தியும் குறைந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில் மாற்றுத் தலைமை தேவை என்ற பிரச்சாரத்துடன் காங்கிரஸ் மக்களை அணுகி வருகிறது.

 வளர்ச்சி இல்லை என குற்றச்சாட்டு

வளர்ச்சி இல்லை என குற்றச்சாட்டு

குஜராத்தில் பட்டிதார் இன மக்கள் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருவதால் அரசுக்கு நெருக்கடியான சூழல் நிலவுகிறது. இதனிடையே வேலைவாய்ப்புகளை உருவாக்காத காரணத்தால் மாநிலத்தில் வளர்ச்சியே இல்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

 சவாலாக இருக்கும்

சவாலாக இருக்கும்

தீபாவளிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இந்நிலையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டால் ராகுல் தலைமையில் சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும், இது அவர் முன்னால் உள்ள மிகப்பெரிய சோதனை என்றே பார்க்கப்படும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Election comission of India today evening goint to announce the dates of elections to be held for Gujarat and Himachal pradesh assembly constituencies, these elections will depict the strength of BJP and Congress.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற