நீக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை திரும்பப் பெறலாம்... வாட்ஸ் அப்பில் புதிய வசதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நீக்கப்பட்ட புகைப்படங்களை இனி மீண்டும் பெற முடியும்- வீடியோ

  டெல்லி : ஆன்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக ஒரு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின்படி பயனாளர்கள் நீக்கப்பட்ட மீடியா பைல்களை மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

  இதற்கு முன்னர் வாட்ஸ்அப்பில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெற முடியாது. ஆனால் WABetainfo மூலம் நீக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்கள் அனைத்தையும் திரும்பப் பெற முடியும். இந்த புதிய அம்சமானது 2.18.106 மற்றும் 2.18.110க்கு இடைப்பட்ட வாட்ஸ் அப் அப்டேட்டுகளில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  WhatsApp now allows to download deleted media files

  கடந்த மாதத்தில் வாட்ஸ் அப்பில் ஒரு புதிய வசதி பீட்டா அப்டேட் மூலம் செய்யப்பட்டது. இது விரைவில் ஐஓஎஸ், ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் போன் பயன்பாட்டாளர்களுக்கு கிடைக்கும். பதிவு செய்த வாட்ஸ் அப் எண்ணை பயனாளர் எந்த சிரமமுமின்றி வேறு எண்ணிற்கு மாற்றிக் கொள்வதே அந்த அப்டேட்.

  புதிய எண்ணை மாற்றும் அம்சமானது தற்போது 2.18.97 கூகுள் ப்ளே ஸ்டோரின் ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் கிடைக்கிறது. இது பின்னர் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் செல்போன்களிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

  புதிய தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் அப்பை மாற்றும் வசதியானது வாட்ஸ் அப் செட்டிங்கில் சேஞ்ச் நம்பர் என்று இடம்பெற்றிருக்கும். பழைய மற்றும் புதிய எண்களை பதிவேற்றம் செய்த பின்னர் எந்த எண்ணில் உள்ள எண்களின் விவரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது என்று வாட்ஸ் அப் கேட்கும்.

  பயனாளர் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தஉடன் பழைய எண்ணில் இருந்த வாட்ஸ் அப் சாட்டுகள் அனைத்தும் புதிய எண்ணிற்கு எளிதில் மாறிவிடும். தற்போது வாட்ஸ் அப்பில் மாதந்தோறும் 1.5 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர். இவர்கள் நாளொன்றிற்கு 60 பில்லியன் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றனர். இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் வாட்ஸ் அப் பயனாளர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Instant messaging app WhatsApp has added a new feature for Android. The new feature lets users download deleted media files.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற