காவிரி உட்பட பல முக்கிய வழக்குகளை விசாரித்த தீபக் மிஸ்ரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தீபக் மிஸ்ரா, நீதிபதியாக பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்தவர்.

1953ம் ஆண்டு, அக்டோபர் 3ம் தேதி பிறந்த தீபக் மிஸ்ரா, 1977ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார். அரசியலமைப்பு, சிவில், கிரிமினல் சர்வீஸ், விற்பனை வரி விவகாரங்களில் ஒரிசா ஹைகோர்ட் மற்றும் சேவை தீர்ப்பாயத்தில் வழக்கரிஞராக பணியாற்றியவர்.

Who is Dipak Mishra the next Chief Justice of India

1996ம் ஆண்டு, ஜனவரி 17ம் தேதி ஒரிசா ஹைகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். 1997ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி இவர் மத்திய பிரதேச மாநில ஹைகோர்ட் நீதிபதியாக்கப்பட்டார்.

1997 டிசம்பரில் தீபக் மிஸ்ரா நிரந்தர நீதிபதியாக்கப்பட்டார். பாட்னா ஹைகோர்ட்டில் 2009ம் ஆண்டு தலைமை நீதிபதி பொறுப்புக்கு வந்தார். அதேபோல டெல்லி ஹைகோர்ட்டில் 2010 மே மாதம் முதல் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார். லோக் அதாலத் மூலம் பல வழக்குகள் தீர்வு பெறச் செய்தார்.

2011 அக்டோபர் 10ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

காவிரி வழக்கு உள்ளிட்ட பல தென் மாநிலங்கள் தொடர்புள்ள வழங்குகளை விசாரித்தவர் இவர். காவிரி வழக்கு விசாரணையின்போது பெங்களூரில் தமிழர்கள் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டபோது, கர்நாடக அரசை கடுமையாக கண்டித்தவர் இவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
According to his official profile, Justice Dipak Misra (born on 03rd October, 1953) enrolled as an Advocate on 14th February, 1977 and Practiced in Constitutional, Civil, Criminal, Revenue, Service and Sales Tax matters in the Orissa High Court and the Service Tribunal.
Please Wait while comments are loading...