For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியாரை பார்த்து பாஜகவுக்கு பயம் ஏன்? சித்தராமையா கேள்வி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பாஜகவுக்கு பெரியாரை பார்த்து ஏன் பயம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை போல, தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று, பாஜகவின் எச்.ராஜா தனது முகநூலில் கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு தமிழகம் முழுக்க பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

Why is the BJP afraid of the Periyar? - Siddaramaiah

இதையடுத்து பயந்துபோன ராஜா, தனது பேஸ்புக் அட்மின்தான், இவ்வாறு ஒரு போஸ்ட்டை வெளியிட்டதாக கூறி, அதை நீக்கியுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், பெரியார் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். புரட்சிகர சமூக சீர்திருத்தவாதியான ஈவேராவை (பெரியார்) பார்த்தால் ஏன் பாஜகவுக்கு பயம்? ஜாதி அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுய மரியாதை கொடுத்தவர் பெரியார். பாஜகவின் வர்க்க ஏற்றத்தாழ்வு கொள்கையை மக்கள் இதன் வழியாக பார்க்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
"I am shocked by the vandalism displayed by BJP workers in desecrating Periyar Statue . Why is the BJP afraid of the revolutionary social reformer E.V.R. ? Periyar gave the people exploited by caste system self respect. People will see through the BJP’s class bias" says Siddaramaiah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X