காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் நியமனம் எப்போது? தொடரும் இழுபறி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

ராகுல் காந்தியைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவதை விட கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ராகுல் காந்தியை தலைவராக்கும் தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பின.

சமிக்ஞையே இல்லை

சமிக்ஞையே இல்லை

நவம்பர் 2-வது வாரத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் அதற்கான எந்த ஒரு சமிக்ஞையுமே இல்லாத நிலைதான் உள்ளது.

அடுத்த மாதம் தேர்தல்

அடுத்த மாதம் தேர்தல்

ராகுல் காந்தி தற்போது குஜராத் தேர்தல் களத்தில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே இமாசலப் பிரதேச தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த மாதம்தான் குஜராத் தேர்தல் நடைபெற உள்ளது.

குஜராத் தேர்தலுக்கு பின்

குஜராத் தேர்தலுக்கு பின்

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு இறுதிக்குள் உட்கட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும். ஆகையால் குஜராத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ராகுல் காந்தி தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இமேஜ் அடிவிழும்

இமேஜ் அடிவிழும்

அதேநேரத்தில் இமாச்சலபிரதேசம், குஜராத் தேர்தல்களுக்கு முன்னரே ராகுல் காந்தியை தலைவராக்கியிருக்கலாம் என்கிற கருத்தும் காங்கிரஸில் நிலவுகிறது. ஆனால் ஒருவேளை குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள் பாதகமாக வந்தால் ராகுலின் இமேஜ் அடிவாங்கும் என்றும் காங்கிரஸில் இன்னொரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rahul Gandhi’s elevation as the president of the Congress party has been put on hold yet again.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற