அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனலடித்து கொண்டிருக்கிறது.. தற்சமயம் 5 முனைப்போட்டி உருவாகி உள்ளது.. பிரதான கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.. இப்படியான பரபரப்புக்கு நடுவில், என்டிஏ கூட்டணிக்கள் ஒரு மிகப்பெரிய அதிகாரப் போட்டி சைலண்ட்டாக நடந்து கொண்டிருக்கிறதாம்.. இதை பற்றின பிரத்யேக செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வருவதாக இருந்த திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ஒரு பெரிய உட்கட்சிப் பூசல் நடப்பதையே உறுதிப்படுத்துகிறது..

அதேசமயம், அமமுக டிடிவி தினகரன் மற்றும் பாமக அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று மார்ச் 21 டெல்லிக்கு விரைந்து அமித் ஷாவைச் சந்திக்கச் சென்றிருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி வருகிறதாம்.
எடப்பாடி பழனிசாமி
காரணம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதை தடுப்பதே தன்னுடைய முதன்மையான அரசியல் வேலை என்று சொல்லி வந்த டிடிவி தினகரன், இப்போது தேஜ கூட்டணியில் இணைந்துள்ளார்.. ஆனால், கூட்டணியில் சேர்ந்தது முதலே எடப்பாடிக்கு மறைமுகமாகக் குடைச்சலையும் கொடுத்து வருகிறார்..
தமிழகத்தில் இதுவரை திராவிடக் கட்சிகள் தான் தலைமையேற்று வந்த மரபை உடைக்கும் முயற்சியில் டிடிவி இறங்கியுள்ளதாகவே தெரிகிறது.. நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் கூட்டணிக்கு பாஜக தான் தலைமை.. நாங்கள் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்" என்று பகிரங்கமாக அறிவித்தது, அதிமுகவின் "கூட்டணித் தலைமை" என்ற அந்தஸ்துக்கே விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாகப் பார்க்கப்படுகிறது..
பாஜகவின் அசைன்மெண்ட்
தென் மாவட்டங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை அமித் ஷாவிடம் விரிவாக விளக்கி, அந்தத் தொகுதிகளின் வெற்றி கூட்டணிக்கு எவ்வளவு பலம் சேர்க்கும் என்பதை உணர்த்த டிடிவி திட்டமிட்டுள்ளார்.. அதே பாணியில், வட மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கியை முன்வைத்து அன்புமணி ராமதாஸும் அமித் ஷாவைச் சந்தித்து வருகிறார்.. இவர்கள் இருவரும் டெல்லி மூலம் தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை உறுதி செய்துவிட்டால், அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியால் எதற்கும் மறுப்பு சொல்ல முடியாது என்பதே இவர்களது வியூகம்..
இந்த "அசைன்மென்ட்" காரணமாகவே பியூஸ் கோயலின் தமிழகம் வருகை தள்ளிப் போடப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. பாஜகவின் இத்தகைய அரசியல் நகர்வுகளும், கூட்டணிக் கட்சிகளின் தன்னிச்சையான டெல்லி பயணமும் எடப்பாடியை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறதாம்.
பாஜகவின் அழுத்தத்தால் மட்டுமே டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க சம்மதித்த எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது கூட்டணி தலைமைக்கே சிக்கல் வந்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லையாம்..
எடப்பாடி முன்புள்ள ஆப்ஷன்கள் என்னென்ன
இதுகுறித்து சில அரசியல் விமர்சகர்கள் நம்மிடம் பேசும்போது, "இது அதிமுகவின் ஆதிக்கத்தை சிறுமைப்படுத்தி, தங்களை முக்கியமான சக்தியாகக் காட்டிக்கொள்ளும் மற்ற கட்சிகளின் முயற்சியாகவே தெரிகிறது.. ஒருவேளை பாஜகவின் அழுத்தம் இப்படியே தொடர்ந்தால், எடப்பாடி சில ஆப்ஷன்களை முன்னெடுக்க வாய்ப்புள்ளது.
முதலாவதாக, எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் ஆளுமையை நிரூபிக்க "தனித்து ஆட்சி" மற்றும் "அதிமுக தலைமையிலான கூட்டணி" என்ற தனது அடிப்படை நிலைப்பாட்டில் இன்னும் உறுதியாக இருக்க வாய்ப்புள்ளது..
வின்னபிலிட்டி கார்டு
அடுத்ததாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது போல "தலைமையில் சமரசம் இல்லை" என்ற தீர்மானத்தை நிறைவேற்றி டெல்லிக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பலாம்..
அதேபோல, எந்தெந்த தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கி வலுவாக இருக்கிறது என்ற தரவுகளை அமித் ஷாவிடம் முன்வைத்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுக்கொடுக்க முடியாது என "வின்னபிலிட்டி" (Winnability) கார்டை பயன்படுத்தி கூட்டணிக் கட்சிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வர அவர் காய் நகர்த்தலாம்.. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலை ரகசியமாக தயார் செய்து வைத்துக்கொண்டு, கடைசி நிமிடம் வரை இழுபறியை நீடிக்க செய்வதன் மூலம் பாஜகவை இறங்கி வர வைக்க எடப்பாடி முயலலாம்..
ஒருவேளை டெல்லியின் பிரஷர் கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றால், அதிமுகவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, பாஜகவை தவிர்த்துவிட்டு மற்ற சிறிய கட்சிகளைத் தனது தலைமையில் ஒருங்கிணைத்து ஒரு வலுவான திராவிட அணியை முன்னிறுத்தும் பிளான் B அஸ்திரத்தையும் கையில் எடுக்கலாம்.. ஆனால், எடப்பாடிபழனிசாமி என்ன முடிவில் உள்ளார் என தெரியவில்லை" என்று தங்கள் கருத்துக்களாக பகிர்ந்து கொண்டுள்ளனர்..!!
-
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
சல்லி சல்லியா போகுதே என்டிஏ ஆசை.. டிடிவி தினகரன், அன்புமணி கறாரால் அதிரும் பாஜக! அமித்ஷா முடிவு என்ன -
’அம்மா’ இல்லாத பிள்ளையான அதிமுக..எடப்பாடியை அசிங்கப்படுத்திய அமித் ஷா! மனதுக்குள் குமுறும் ர.ர.க்கள் -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications