விரைவில் பாஜகவில் இணைகிறார் நடிகை ரம்யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பியும், நடிகையுமான ரம்யா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே பாஜக மற்ற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை தன் வசம் இழுக்க முயற்சி செய்து வருகிறது.

 Will Ramya join BJP?

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் மூத்த தலைவர் எஸ். எம் கிருஷ்ணாவிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் எடியூரப்பா.

மேலும் பாஜகவில் இணைந்தால் துணை குடியரசு தலைவர் பதவி, ஆளுநர் உள்ளிட்ட பதவிகள் என பல சலுகைகள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட சில ஆபர்கள் அவருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரசில் சில காலமாக அதிருப்தியில் இருந்து வந்த எஸ். எம். கிருஷ்ணாவும், பாஜக பக்கம் திரும்பினார். கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் விரைவில் பாஜகவில் முறைப்படி இணையலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரைத் தொடர்ந்து நடிகை ரம்யாவும் பாஜகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.  இது குறித்து பாஜக மாவட்ட தலைவர் கே.நாகன்னா கவுடா கூறுகையில், நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ரம்யாவிற்கு பாஜகவின் செயல்பாடுகள் பிடித்து உள்ளது. அவர் விரைவில் பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். ஆனால், ரம்யா இதுபற்றி எதுவும் பேச மறுத்துவருகிறார்.

ஒருவேளை எஸ்.எம்.கிருஷ்ணா. ரம்யா ஆகியோர் பாஜகவில் இணைந்தால், மாண்டியா மற்றும் மைசூரைச் சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவில் இணைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதிகள் முழுவதும் பாஜகவின் வசமாக மாறும் வாய்ப்புள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
former Lok Sabha member Ramya Will join BJP?
Please Wait while comments are loading...