பீகாரில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த 5 பேர்
பாட்னா: பீகாரில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 30 வயது பெண்ணை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 30 வயது பெண் பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள தனது சகோதரியை பார்க்க கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பீகார் வந்தார்.

முசாபர்பூர் மாவட்ட ரயில் நிலையத்தில் இரவு 8 மணிக்கு வந்திறங்கினார். அப்பபோது மாவட்ட கூடுதல் நீதிபதியின் டிரைவர் நிக்கு பண்டிட் உள்பட 5 பேர் அந்த பெண்ணைஅணுகி அவர் செல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறினர். ஆனால் அவர்கள் அப்பெண்ணை முசாபர்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அந்த வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் வைத்து அவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர் அதிகாலை அங்கிருந்து தப்பியோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் நிக்கு பண்டிட், ஜிதேந்திர பாஸ்வான், விகாஸ் திவாரி, கௌதம் ஜா மற்றும் தீபக் குமார் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் நிக்கு பண்டிட்டை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகிறார்கள்.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications