For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

33% இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதால்.. ஒவ்வொரு தேர்தலிலும் பலிகடாவாகும் பெண்கள்!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் மட்டும் பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று விவாதிக்கப்படும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ளது. அரசியல் கட்சிகள் நினைத்தால் அதை நிறைவேற்றியிருக்கலாம். ஒவ்வொரு தேர்தலிலும் பெண்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.

ஒரு பெண் ஆளும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 693 பேரில் வெறும் 65 பேர் தான் பெண்கள். கேரள சட்டசபையில் இதுவரை 15 பெண் உறுப்பினர்களுக்கு மேல் இருந்தது இல்லை.

கேரளாவில் உள்ள வாக்காளர்களில் 51.9 சதவீதம் பேர் பெண்களாக இருக்கையில் பெண்கள் பிரிநிதித்துவம் 10 சதவீதம் கூட இல்லை.

ஆணாதிக்கம்

ஆணாதிக்கம்

அனைத்து கட்சிகளுமே ஆணாதிக்கம் மிக்கவை. அதனால் தான் பெண்களுக்கு சட்டசபையில் முக்கியத்துவம் இல்லாமல் போகிறது என்று அரசியல் நிபுணரான டாக்டர் சந்தீப் சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒன்இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டியும் அளித்துள்ளார்.

தேர்தல்

தேர்தல்

ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதற்கு காரணம் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆணாதிக்கம் மிக்கவை. அனைத்து கட்சிகளிலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் குழு ஆண்கள் அதிகம் உள்ள குழுவாக இருக்கும். இதனால் முக்கிய அரசியல் முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்கு மிகக் மிகக் குறைவு என்கிறார் சாஸ்திரி.

அம்மா, மமதா

அம்மா, மமதா

சில கட்சிகளுக்கு பெண்கள் தலைவியாக உள்ளனர். உதாரணம் மமதா, சோனியா காந்தி மற்றும் ஜெயலலிதா. ஆனால் அவர்களின் கட்சியிலும் அவர்களால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் உள்ளது. ஒரு கட்சிக்கு பெண் தலைமை தாங்கினாலும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் ஆண்களே என்று சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

பெண்கள்

பெண்கள்

இந்திய தேர்தலை பொறுத்த வரை பெண்களால் திடமாக இருக்க முடியாது என்பது வெறும் சப்பைக்கட்டு தான். தேர்தலில் பெண்களை அதிக அளவில் நிறுத்தினால் வெற்றி கிடைக்காது என்று கூறுவதில் உண்மை இல்லை என்று சாஸ்திரி கூறியுள்ளார்.

தேர்தல்

தேர்தல்

ஒவ்வொரு தேர்தலிலும் பெண்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியாது என்று நினைத்தால் அங்கு பெண் வேட்பாளரை நிறுத்துவார்கள். இதன் மூலம் பெண்களை தேர்தலில் நிறுத்தியது போன்றும் ஆகிவிட்டது அவர்களால் வெற்றி பெற முடியாது என்றும் கூறலாம் என்கிறார் சாஸ்திரி.

மசோதா

மசோதா

பெண்களின் இந்த அவல நிலை மாற மசோதா இல்லை மாறாக திடமான மனங்கள் தான் தேவை. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது என்று அனைத்து கட்சிகளும் சேர்ந்து முடிவு செய்தால் மசோதாவே தேவை இல்லை என்று சாஸ்திரி நம்புகிறார்.

English summary
Ahead of every election there are a host of issues that are debated and one among them is the lack of women representation. Women are the sacrificial lambs in every election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X