For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. யாருக்கெல்லாம் ஒர்க் பிரம் ஹோம் தெரியுமா? ராஜஸ்தான் அரசுக்கு பரிந்துரை

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை அமல்படுத்துமாறு அரசுக்கு மாநில சமூகநல வாரியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாதவிடாய் எனும் பிரச்சினை பருவமழை எட்டிய பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். 3 முதல் 5 நாட்களை வரை உதிரபோக்கு ஏற்படும் போது பெண்கள் கடும் துன்பப்படுகிறார்கள்.

திருமணமானதும் இந்த ரத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் கருவாக வளர்கிறது என்ற ஒரு மகிழ்ச்சி இருந்தாலும் மாதவிடாயால் அவதிப்படுவோருக்கு மட்டுமே தெரியும் அந்த வலியும் வேதனையும்!

மாதவிடாய் சார்.. பரவாயில்ல வா! பாஜக நிர்வாகி கல்லூரியில் “பகீர்” - பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது மாதவிடாய் சார்.. பரவாயில்ல வா! பாஜக நிர்வாகி கல்லூரியில் “பகீர்” - பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது

அடிவயிறு முதல் முதுகுதண்டு வரை

அடிவயிறு முதல் முதுகுதண்டு வரை

அடிவயிறு முதல் முதுகுதண்டு வடம் வரை வலியெடுக்கும். தூங்கவும் முடியாது, உட்காரவும் முடியாது, எப்போது இந்த சுழற்சி முடியும் என பெண்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும். சிலருக்கு தொடை பகுதிகளில் உயிர் போகும் அளவுக்கு வலியை கொடுத்தும். இவ்வாறு வலித்து வலித்து ரத்தத்தை வெளியேற்றும் என பெரியவர்கள் சொல்வார்கள்.

ஃபெல்லோபியன் டியூப்

ஃபெல்லோபியன் டியூப்

அது போல் ஃபெல்லோபியன் டியூப்களில் நீர் கட்டிகள் இருந்தாலும் உதிரபோக்கு வருவதற்காக வலி அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள். இதற்காக சிலர் மருத்துவரின் பரிந்துரையிலும் மருந்து கடைக்காரர்களின் பரிந்துரைகளிலும் மருந்துகளை உட்கொள்வார்கள். எலுமிச்சை சாறு குடிப்பார்கள், வெந்தயத்தை உண்பார்கள்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் உள்ளிட்டவற்றையும் செய்து பார்ப்பார்கள். யூடியூப்பில் வரும் அனைத்து டிப்ஸ்களையும் பாலோ செய்வார்கள். ஆனாலும் கொஞ்ச நேரம் மட்டுமே வலி கேட்கும். அதன் பிறகு வலி எடுக்கத் தொடங்கும். குறைந்தபட்சம் 4 நாட்கள் வரை பெண்களால் எந்த வேலையையும் செய்ய முடியாது.

வேலைக்கு செல்லும் பெண்கள்

வேலைக்கு செல்லும் பெண்கள்

அப்படியிருக்கும் போது வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை படுமோசம். இந்த வலியுடன் வேலைக்கு செல்ல வேண்டும். வீட்டில் இருந்தால் படுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அலுவலகத்தில் அத்தனை பேர் மத்தியில் நமது அசவுகரியத்தை எப்படி வெளிப்படுத்துவது? ஒரு சிலர் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிலும் தவியாய் தவிக்கிறார்கள்.

 சில பெண்களுக்கு வாந்தி

சில பெண்களுக்கு வாந்தி

சில பெண்களுக்கு வாந்தி வருவது போன்ற உணர்வும் ஏற்படும். இதனால் அவர்களால் உண்ண முடியாது. இதனால்தான் அந்த காலங்களில் வீட்டு தூரம் என்று கூறி பெண்களை 4 நாட்களுக்கு எந்த வேலையையும் செய்யவிடாமல் தனியே இருக்க வைத்துவிடுவார்கள். அந்த 4 தினங்களும் பெண்களுக்கு உதிர போக்கால் உடலில் வலிமை இல்லாததால் அவர்களால் எந்த வேலையையும் செய்ய முடியாது என்பதால் அந்த காலத்தில் அப்படி ஒரு ஏற்பாடு!

ஆண், பெண் இருபாலர்

ஆண், பெண் இருபாலர்


தற்போது ஆண், பெண் இருபாலரும் வேலைக்கு செய்ய வேண்டிய பொருளாதார நெருக்கடியான சூழல் நிலவி வருவதால் மாதந்தோறும் பெண்கள் இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள். பல கார்பரேட் நிறுவனங்கள் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம்

ராஜஸ்தான் மாநிலம்

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டிலிருந்தடியே வேலை பார்க்கும் திட்டத்தை (Work From Home) அமல்படுத்துமாறு அரசுக்கு மாநில சமூகநல வாரியம் பரிந்துரை செய்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
Rajasthan state is to give Work from Home offer for women who will be in menstrual cycle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X