For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் வேலை கேட்டு விண்ணப்பத்திருந்தால் உங்களுக்கு கிடைத்திருக்காது.. ஜேட்லிக்கு சின்ஹா பதிலடி

80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார் என அருண் ஜேட்லி விமர்சித்தற்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: 80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார் என அருண் ஜேட்லி விமர்சித்தற்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜேட்லி அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் 'நான் இப்போது பேசியாக வேண்டும்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடியும் நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் சீர்குலைத்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதனை நான் இப்போது பேசவில்லை என்றால், தேசிய கடமையில் இருந்து தவறிவிட்டதாக அர்த்தமாகி விடும் என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசின் மீதான அவரது விமர்சனம் பாஜக தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சியினர் பாராட்டு

எதிர்க்கட்சியினர் பாராட்டு

அதேநேரத்தில் யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தனது டிவிட்டர் பக்கத்தில் யஷ்வந்த் சின்ஹாவின் கருத்தை மேற்கோள் காட்டி மோடி அரசை கிண்டலடித்திருந்தார்.

வேலைக்கேட்டு விண்ணப்பிக்கிறார்

வேலைக்கேட்டு விண்ணப்பிக்கிறார்

இந்நிலையில் யஷ்வந்த் சின்ஹாவின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி நேற்று பதில் அளித்தார். அதாவது யஷ்வந்த் சின்ஹாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சராக இருப்பது சரியாக இல்லை போலும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி 80 வயதில் அவர் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார் என்றார்.

சின்ஹாவை சாடிய ஜேட்லி

சின்ஹாவை சாடிய ஜேட்லி

மேலும அவர் நிதி அமைச்சராக இருந்தபோது 15 சதவீத வாராக்கடன் இருந்தது உள்ளிட்ட ‘சாதனைகளை' மறந்து விட்டார். கொள்கைகளை விட்டுவிட்டு மனிதர்களை விமர்சிக்க தொடங்கி விட்டார் என்றும் யஷ்வந்த் சின்ஹாவை சாடியிருந்தார்.

ஜேட்லிக்கு பதிலடி

ஜேட்லிக்கு பதிலடி

யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் கைகோர்த்து செயல்படுகிறார் என்றும் அருண்ஜேட்லி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் அருண் ஜேட்லியின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜகவில் சலசலப்பு

பாஜகவில் சலசலப்பு

அதாவது நான் வேலை கேட்டு விண்ணப்பமிட்டிருந்தால், அருண் ஜேட்லி அங்கு முதல் இடத்தில் அமர்ந்து இருக்க முடியாது என கூறியுள்ளார். பாஜக மூத்த தலைவர்கள் இதுபோன்று ஒருவருக்கொருவர் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Former union minister Yashwant sinha respond to Arunjaitely accusation. He said if I would have applied for a job you would not have got it to Arun jaitely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X