கடந்த 9 ஆண்டுகளில் சர்வதேச அளவில் இந்தியா கவனம் பெற்றுள்ளது! உ.பி முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: கடந்த 9 ஆண்டுகளில் சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெயர் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் வியப்புடன் பார்த்து வருகின்றன என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக வாரணாசி வந்திருந்த யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் 9 ஆண்டுக்கால ஆட்சியின் பெருமைகளை எடுத்துரைக்கும் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "2014 ஆம் ஆண்டுக்கு முன்பு மத்திய அரசின் அப்போதைய ஆட்சியின் மீது மக்கள் அவநம்பிக்கையுடனும், கோபத்துடனும் இருந்தார்கள். ஆனால், தற்போது மக்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பிம்பம் மாறுதல் அடைந்துள்ளது. எல்லைகள் பலமடைந்திருக்கின்றன. இந்தியா எப்படி வளர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் கூட பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. நமது நாட்டின் கவுரவம் மேம்பட்டிருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் மேம்பாட்டிற்காகவும், மனிதக்குலத்தின் நலனுக்காகவும் பாஜக பாடுபடுகிறது. இதன் விளைவாகதான் தற்போது இந்தியா உலக நாடுகளின் வரிசையில் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து இருக்கிறது.
ஒரு காலத்தில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் தற்போது அமைதிப் பாதையில் சென்றுள்ளது. பிரிவினைவாதிகளின் கைகளில் இருந்த வடகிழக்கு மாநிலங்கள் தற்போது வளர்ச்சியின் பாதையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் 120 மாவட்டங்களில் நக்சல்கள் தீவிரமாக இயங்கி வந்தனர். தற்போது இவர்கள் 3-4 மாவட்டங்களில் முடக்கப்பட்டுள்ளனர். இதற்கு பிரதமர் மோடியின் தலைமைதான் காரணம்" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications