For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகாலாந்து புதிய முதல்வராக ஜிலியாங்க் பதவியேற்றார்! 11 அமைச்சர்களும் பதவியேற்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

Zeliang sworn-in as chief minister of Nagaland
கோஹிமா: நாகாலாந்தின் புதிய முதல்வராக ஜிலியாங் இன்று பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

நெய்பியூ ரியோ தலைமையிலான நாகாலாந்து மக்கள் முன்னணியானது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது. நாகா மக்கள் முன்னணி லோக்சபா தேர்தலில் 1 தொகுதியில் வென்றுள்ளது.

லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட நெய்பியூ ரியோ 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்திலும் நெய்பியூ ரியோ கலந்து கொண்டார்.

அவருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜக உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து நெய்பியூ ரியோ தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து நாகாலாந்தின் புதிய முதல்வராக ஜிலியாங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று ஜிலியாங்குக்கு அம்மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

English summary
TR Zeliang sworn-in as chief minister of Nagaland by Governor Ashwani Kumar along with 11 ministers on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X