புளோரிடா வங்கியில் கொள்ளை முயற்சி.. பிணைக் கைதிகள் 11 பேர் பத்திரமாக மீட்பு.. ஒருவர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

புளோரிடா: அமெரிக்காவின், புளோரிடா மாநிலத்தில் உள்ள வங்கி ஒன்றில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்டனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லா பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார் அந்நாட்டு நேரப்படி காலை 9 மணிக்கு வங்கியின் உள்ள புகுந்த அந்த நபர், வங்கி மேலாளரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். பணம் இல்லாததால் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் 11 பேரை   பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுத்தார்.

11 person held hostage at bank in Florida

இதையடுத்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அந்த இடத்துக்கு விரைந்து வந்து சுற்றி வளைத்தனர். இதனிடையே மர்ம நபருடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து 11 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் பதட்டம் நிலவியது. மேலும் மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Several persons being held hostage at bank in Florida
Please Wait while comments are loading...