சீனாவை வாட்டும் கன மழை... வெள்ளத்தில் சிக்கி 1 லட்சம் பேர் தவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜிலின் நகரத்தில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, அந்த நகரம் முழுவதும் நீரில் மிதக்கிறது. இதனால் அங்குள்ள ஒரு லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் ஜிலின் நகரத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் விட்டுவிட்டுப் பெய்து வரும் கனமழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுவரை வெள்ளத்தால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் ஊடகங்களுக்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 18 killed in floods in China's northeastern Jilin province

ஜிலின் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் சாலைகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது . பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது.

 18 killed in floods in China's northeastern Jilin province

1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நகரத்தை விட்டு இடம்பெயர வேண்டிய நிலையில் உள்ளனர் என்று ஜிலின் நகரின் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண அலுவலகம் தெரிவித்துள்ளது.

Chinese scientists made ‘super dog’, next genetically-modified human!-Oneindia Tamil

மேலும், சேறு, குப்பைகள், பழுதான பாலங்கள் மற்றும் தொலைத்தொடர்பு, மின் இணைப்புகள் என அனைத்தையும் சரி செய்யும் பணியில் சுமார் 32,360 தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் ஜிலின் நகர அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
18 killed in floods in China's northeastern Jilin province says officials.
Please Wait while comments are loading...