அப்படியே நகர்த்தப்பட்ட "ராட்சச" 3,800 டன் கட்டிடம்.. சீனாவில் அதிசய சம்பவம்.. எப்படி இது சாத்தியம்?
ஷாங்காய்: நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் சீன மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுமார் 3 ஆயிரத்து 800 டன் எடையுள்ள கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்வது சாதாரண காரியமல்ல. அதற்கு துல்லியமான கணக்கீடுகளும், கற்பனைக்கு எட்டாத தொழிற்நுட்பங்களின் அவசியமும் முக்கியத் தேவை. அதுமட்டுமல்லாமல், கற்பனைக்கு எட்டாததை அறிவால் எட்டும் மாபெரும் பொறியாளர்கள் தேவை.

நடைபயிற்சி இயந்திரம்
3,800 டம் எடையுள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தின் அடியில் ஸ்லைடிங் ரயில்ஸ் என்று கூறப்படும் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு நகர்த்தி கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடம் தரையில் இருந்து சில அடிகள் உயர்த்தப்பட்டு, 'நடைபயிற்சி இயந்திரம்' என்று அழைக்கப்படும் புதிய தொழிற்நுட்பத்தின் உதவியுடன் பிரச்னையின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் சாதனை
ஆனால் இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் நகர்த்தி இடமாற்றம் செய்யப்படுவது முதல்முறையல்ல. முன்னதாக 2020ம் ஆண்டு 7 ஆயிரத்து 600 டன் எடையுள்ள லகேனா ஆரம்பப் பள்ளி கட்டிடம் ஷாங்காய் நகரத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. 5 மாடி கட்டிடத்தை இடமாற்றம் செய்வதற்காக பொறியாளர்கள் கிட்டத்தட்ட 200 மொபைல் ஆதரவு என்று கூறப்படும் தொழிற்நுட்பத்தை இணைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த கட்டிடம் 18 நாட்களில், 21 டிகிரி சுழற்றப்பட்டதோடு, 62 மீட்டர் தூரத்திற்கு நகர்த்தப்பட்டது.

அமெரிக்காவில் இடமாற்றம்
நவீன பொறியியலின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்காவின் இந்தியானா பகுதியிவில், கட்டப்பட்ட கட்டிடம் இதேபோல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1930களில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், சுமார் 11 ஆயிரம் டன் எடை கொண்டது. இந்த கட்டிடம் அமைந்துள்ள இடத்தில், நிர்வாக வசதிக்காக சில பணிகள் செய்ய வேண்டும் என்று கட்டிட நிர்வாகம் முடிவெடுத்தது.

சாதனை செய்த பொறியாளர்கள்
அப்போது அந்தக் கட்டிடத்தில் தொலைபேசி நிறுவனத்தின் தலைமையகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தை இடமாற்றம் செய்ய முடிவெடித்த பின், அந்த நிறுவனத்தின் பணிகளுக்கு எந்தப் பிரச்னைகள் இல்லாமல், 600 ஊழியர்கள் பணி செய்துகொண்டிருந்த போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை முடிக்க 4 வாரங்களுக்கும் கூடுதலாக நேரம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அமெரிக்காவில் உள்ள விமான நிலைய முனையம், சான் ஆண்டனியோ பகுதியில் அமைந்துள்ள ஃபார்மவுனட் விடுதி ஆகியவையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications