For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலையை காட்டிய தாலிபான்: நடு வீதியில் கிரேன்களில் கொன்று தொங்க விடப்பட்ட 3 ஆண்கள்.. காரணம் தெரியுமா?

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் கிரேன்களில் 3 பேர் தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையில் காணப்படும் ஒரு புதிய புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    அரங்கேறும் Taliban-களின் கொடூர தண்டனைகள் | Afghanistan Updates | Oneindia Tamil

    ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த 3 ஆண்களும், கொள்ளையடிக்க முயன்றபோது சிக்கி, இப்படி தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

    பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வு.. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வு.. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

    பிரபல ஆங்கில ஊடகமாக தி சன் பத்திரிக்கை, இந்த படங்களை வெளியிட்டுள்ளது. துணை ஆளுநர் மவ்லவி ஷிர் அஹ்மத் முஹாஜிர் கூறியதாக மேற்கோள் காட்டி, தி சன் வெளியிட்ட செய்தியில், கொல்லப்பட்ட அந்த மூன்று பேரும் கொள்ளையடிப்பதற்காக ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தபோது பிடிபட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிரேனில் தொங்க விடப்பட்டனர்

    கிரேனில் தொங்க விடப்பட்டனர்

    ஹீரத் பகுதியில் பொது மக்கள் பார்வைக்காக இப்படி கொள்ளையர்கள் தொங்க விடப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில், சிறிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், மற்றும் கொலை, கடத்தல் மற்றும் கொள்ளை ஆகிய பெரிய குற்றங்களை செய்தவர்கள் என சுமார் 85 பேரை கைது செய்துள்ளோம் என்கிறார் குற்றத் தடுப்பு பிரிவின் நூர் அகமது ரப்பானி.

    வீதிகளில் திருடர்கள்

    வீதிகளில் திருடர்கள்

    ஆப்கன் தலைநகர் காபூலில் சிறிய அளவில் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள், சமீபத்தில், பொது வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர், கைவிலங்கு பூட்டி, முகத்தில் கரி பூசி, வாயில் கெட்டுப்போன பழைய ரொட்டி துண்டை திணித்து அவர்கள் இழுத்துச் செல்லப்பட்ட செய்தி கடந்த வாரம் வெளியாகியிருந்தது.

     கடுமையான தண்டனைகள்

    கடுமையான தண்டனைகள்

    திருட்டு குற்றவாளிகளுக்கு கைகளை வெட்டுவது, கொலைகாரர்களை தலையில் சுடுவது அல்லது தூக்கிலிடுவது போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அனைத்துமே பொது வெளியில் வைத்து செய்யப்படுகிறது. தாடியை ட்ரிம் செய்தது அல்லது பிரார்த்தனையில் கலந்து கொள்ளாததற்காக மத காவல்துறையினர் சில ஆண்களை அடித்த தகவலும் சமீபத்தில் வெளியானது.

    பழைய ஆட்சி

    பழைய ஆட்சி

    காபூல் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். படிப்படியாக சிலர் சீருடை அணியத் தொடங்கியுள்ளனர். தாலிபன்கள் நடந்து கொள்ளும் விதம் பொதுமக்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது. 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை அவர்கள் நடத்திய ஆட்சியை மறுபடியும் நினைவு கூறத்தக்கதாக மாறிக்கொண்டிருக்கிறது.

    English summary
    In a fresh set of shocking images that have emerged from Afghanistan, three men were hanged from excavators in the western province of Herat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X