பசிபிக் கடலில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த "மம்மி" கடற்கன்னி.. கறி சாப்பிட்டால் இறப்பு இல்லை.. ஆய்வு
டோக்கியோ: 300 ஆண்டுகள் பழமையான கடற்கன்னி வடிவில் கிடைத்துள்ள மம்மியை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
மம்மிக்கள் என்பது குறிப்பிட்ட ஒரு காலத்தில் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப் பொருள்களை கொண்டும் கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு.
அவ்வாறு காலத்தால் அழியாக மனித மம்மிகளையும் விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

ஜப்பான் பசிபிக் கடல்
அந்த வகையில் ஜப்பானின் பசிபிக் கடலிலுள்ள சிகோகு என்ற தீவின் அருகே ஒரு மம்மி கிடைத்துள்ளது. இது பார்ப்பதற்கு கடல் கன்னி போலவே இருக்கிறது. இது வெறும் 12 இன்ச் மட்டுமே நீளமாக உள்ளது. இது 1736- 1741 ஆம் ஆண்டுக்குள்பட்ட காலகட்டத்தில் ஜப்பானின் சிகோகு பகுதியில் வாழ்ந்த உயிரினமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மீனவர்கள் வலையில் சிக்கிய மம்மி
அந்த மம்மி கைப்பற்றப்பட்ட போது அசோகுசி நகரத்திலுள்ள கோயிலில் இருந்திருக்கிறது. ஜப்பானின் அசாகி ஷிம்புன் என்ற செய்தித் தாள் அளித்த தகவலின்படி கைப்பற்றப்பட்டுள்ள மம்மி பசிபிக் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கையில் கிடைத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மம்மியை கைப்பற்றிய மீனவர்கள் அதை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்தனர்.

கூர்மையான பற்கள்
பின்னர் அதை கோயிலில் வைத்துள்ளனர். இந்த மம்மிக்கு கூர்மையான பற்கள் காணப்படுகிறது. முகமும் விகாரமாக அச்சத்தை கொடுக்கும் வகையில் உள்ளது. இரண்டு கைகள் உள்ளன. தலையில் முடி, புருவம், கண்கள் ஆகியவை உள்ளன. இப்படி அதன் மேற்பகுதி மனிதனின் முக அமைப்புடன் ஒற்று உள்ளது.

வால் பகுதி
ஆனால் கீழ் பகுதியோ மீன்களுக்கு இருப்பது போல் உள்ளது. குறிப்பாக கீழ் பகுதியில் மீன்களை போல செதில்கள் மற்றும் வால் போன்ற குறுகிய முனை காணப்படுகிறது. சுருக்கமாக சொல்ல போனால் கடற்கன்னியை போல் காணப்படுகிறது. இதுகுறித்து ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சிடி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Recommended Video

800 ஆண்டுகள் வாழ்ந்த பெண்
இதுகுறித்து ஓகாயாமா நாட்டுப்புற கழகத்தை சேர்ந்த ஹிரோஷி கினோஷிதா கூறுகையில், ஜப்பானை சேர்ந்த கடற்கன்னிகளுக்கு அழியா தன்மை உள்ளது. இதனால் அதன் இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு இறப்பே இல்லை என சொல்கிறார்கள். இது போல் ஒரு பெண் கடற்கன்னியின் மாமிசத்தை சாப்பிட்டு 800 ஆண்டுகள் வரை வாழ்ந்து வந்தார் என்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications