For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கம், புலி, யானை.. இருக்கு ஆனா இல்லை.. ஹோலோகிராம் முறையில் சர்க்கஸ்..!

ஹோலோகிராம் முறையில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது ரான்கேலி சர்க்கஸ்.

Google Oneindia Tamil News

பெர்லின்: விலங்குகளை சித்ரவதை செய்யக்கூடாது என்பதற்காக முதன்முறையாக ஹோலோகிராம் முறையில் சாகசங்கள் நிறைந்த சர்க்கஸை அறிமுகப் படுத்தி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது ரான்கேலி சர்க்கஸ்.

சர்க்கஸில் விலங்குகள் துன்புறுத்தப் படுவதைத் தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்களை கடுமைப் படுத்தியுள்ளன உலக நாடுகள். அதனைத் தொடர்ந்து அனைத்து சர்க்கஸ்களிலும் குதிரை, யானை, சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சர்க்கஸ் தொழில் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. சர்க்கஸ் ரசிகர்களும் இதனால் சோகமடைந்தனர்.

இந்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியுடன், விலங்குகளைச் சித்ரவதை செய்யாமல், அதே சமயம் சுவாரஸ்யமான சர்க்கஸ் நிகழ்ச்சியை வழங்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது ரான்கேலி சர்க்கஸ்.

தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி... முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி... முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு

எல்லாம் டிஜிட்டல் மயம்:

எல்லாம் டிஜிட்டல் மயம்:

அதன்படி, ஜெர்மனியில் தனது சர்க்கஸ் நிகழ்ச்சியை ஹோலோகிராம் கூடாரத்திற்குள் முழுதும் டிஜிட்டல் மயமாக்கி ரசிகர்கள் மிரள வைத்துள்ளது ரான்கேலி. பிக் டாப் டென்ட் எனப்படும் இந்த ஹாலோகிராம் கூடாரத்திற்குள் விலங்குகள் முதல் கோமாளி வரை அனைவருக்கும் டிஜிட்டலில் உருவம் கொடுத்துள்ளது.

ஹோலோகிராம் முறை:

ஹோலோகிராம் முறை:

11 ப்ரொஜெக்டர், லேசர்ஸ் மற்றும் ஹோலோகிராம் லென்ஸ்களை பயன்படுத்தி இந்த சர்க்கஸை அவர்கள் நடத்தி வருகின்றனர். இதில், 360 டிகிரி காட்சி அனுபவத்துடன் சர்க்கஸ் சாகசங்களை மக்கள் காண முடியும் என்பது சிறப்பம்சம். மக்கள் இதற்கு அளித்து வரும் ஆதரவைத் தொடர்ந்து இதனை மேலும் விரிவுபடுத்த இந்த சர்க்கஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரான்கேலி சர்க்கஸ்:

ரான்கேலி சர்க்கஸ்:

உலகப் புகழ்பெற்ற ரான்கேலி சர்க்கஸ் நிறுவனம், 1976 ஆன் ஆண்டில் நிறுவப்பட்டது. சர்க்கஸ் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாக இருந்து வந்த இது, தடையைத் தொடர்ந்து மிகுந்த நஷ்டத்தை சந்தித்தது. தற்போது இந்த புதிய முயற்சியால் மீண்டும் சர்க்கஸ் துறையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ரான்கேலி முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய முயற்சிகள்:

புதிய முயற்சிகள்:

ரான்கேலியின் இந்த முயற்சியால் மீண்டும் சர்க்கஸ் தொழில் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் பல சர்க்கஸ் நிறுவனங்கள் ஹாலோகிராம் முறையில் சர்க்கஸ் நடத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

English summary
Now, a circus in Germany has taken an innovative step to fight animal cruelty. Circus Ronacalli has begun to phase out real animals in their acts, replacing them with beautiful 3D holograms instead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X