For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைவானில் 13 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து .. தீயில் கருகி 46 பேர் பலி

Google Oneindia Tamil News

காஹ்சியுங்: தெற்கு தைவானில் உள்ள காஹ்சியுங் நகரில் இன்று அதிகாலை குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 46 பேர் பலியாகினர். ஏராளமான மக்கள் காயமடைந்தனர்.

தைவான் நாட்டில் உள்ள காஹ்சியுங் நகரில் இன்று அதிகாலை 3 மணியளவில் 13 மாடி கட்டிடம் ஒன்ற தீப்பிடித்து எரிவதாக தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனிடையே அதிகாலை தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறி துடித்தபடி கட்டிடத்ததை விட்டு வெளியேற முன்றனர். ஆனால் தீ பயங்கரமாக பரவியதால் பலர் தீயில் சிக்கிக்கொண்டர்,

46 dead after 13-story building caught in southern Taiwan

விரைந்து தீயணைப்பு துறையினர் , தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். அதே நேரம் கட்டிடத்திற்குள் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் இறங்கினர். மளமளவென பரவிய தீக்கு மத்தியில் கடும் போராட்டத்திற்கு பின்னர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டனர்

இந்த தீவிபத்தில் யார் என்றே தெரியாத அளவிற்கு 14 உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. மொத்தம் இதுவரை 46 பேர் மோசமான தீவிபத்தில் சிக்கி இறந்தனர். சுமார் 55 பேர் தீ காயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எத்தனை பேர் உயிர்பிழைப்ர்கள் என்பது சிகிச்சைக்கு பிறகே தெரியவரும் என்கிற நிலை உள்ளது.

தைவானிய தொலைக்காட்சியில் காட்டப்பட்ட வீடியோகளை பார்த்த போது, தீயணைப்பு வீரர்கள் தெருவில் இருந்து தண்ணீரை பீய்ச்சி கட்டிடத்தின் மீது அடித்தனர். ஆனால் கட்டிடத்தின் கீழ் தளங்களில் ஆரஞ்சு தீப்பிழம்புகள் மற்றும் புகை பயங்கரமாக வெளியேறியது கண்முன்னே தெரிந்தது.

தீயணைப்பு வீரர்களால் அதிகாலை தொடங்கிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பிற்பகல் வரை நடந்தது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீகட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயணைப்பு துறையின் அறிக்கையின்படி, தீ மிகவும் கடுமையானதாக இருந்தது. கட்டிடத்தின் பல தளங்கள் எரிந்து போனது. தீயணைப்பு வீரர்கள் தீயின் மூலத்தைப் பற்றி உறுதியாக தெரியவில்லை என்று கூறினர்.

தீ விபத்துக்கான காரணம் தெளிவாக இல்லை தெரியவில்லை என்றாலும் அங்கு நிறைய குப்பைகள் குவிந்திருந்தன என்று தீயணைப்பு துறை அறிக்கை கூறுகிறது. அதிகாலை 3 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தைவான் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். தீ விபத்தில் சிக்கிய இந்த கட்டிடம் சுமார் 40 ஆண்டுகள் பழமையானது, கீழ் மட்டத்தில் கடைகள் மற்றும் மேலே குடியிருப்புகள் உள்ளன. கீழ் தளங்கள் முற்றிலும் கருப்பாகிவிட்டன.

English summary
The 13-story building caught on fire in southern Taiwan has killed 46 and injured dozens of people, after it engulfed a residential building overnight on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X