டேய் என் பொம்மையை கொடுடா.. ஏய்.. நான் உன் மாப்பிள்ளை.. ருமேனியாவில் ஒரு ஷாக் திருமணம்!
குழந்தை திருமணத்தை ருமேனியா நாடோடிகள் ஊக்குவிக்கிறார்கள்.
Recommended Video

புச்சாரெஸ்ட், ருமேனியா: "ஏன் என் பொம்மையை எடுத்தே.. என் பொம்மையை திருப்பி குடு..." என்று அந்த பெண் அழுகிறாள். பொம்மையை பிடுங்கி கொண்டது கல்யாண மாப்பிள்ளை. பொம்மையை தரும்படி அழுதது கல்யாண பொண்ணு!
ருமானியாவில் க்ரயோவா என்ற இடம் உள்ளது. இங்கு பெற்றவர்களும், உற்றவர்களும், சுற்றமும், சூழ ஒரு கல்யாணம் நடைபெற்றது. மாப்பிள்ளைக்கு 10 வயது, பொண்ணுக்கு 8 வயசு.
உலகமெங்கும் குழந்தை திருமணத்துக்கு தடை சொல்லப்பட்டுள்ளது. அது சட்டப்படியும் குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்துக்கு எதிரான பிரச்சாரங்களும் நடந்து வருகின்றன. ஆனாலும் இந்த மக்கள் மிக தைரியமாக இந்த கல்யாணத்தை நடத்தி உள்ளனர். குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் ஏன் என்று தெரியவில்லை.

கண்டு கொள்வதே இல்லை
இத்தனைக்கும் இந்த நாட்டில் குழந்தை திருமணத்துக்கு 4 வருஷம் சிறை தண்டனை என்ற அறிவிப்பு உள்ளது. ஆனாலும் தொடர்ந்து இவர்கள் குழந்தைகளை இழுத்து பிடித்து மணமேடையில் உட்கார வைத்து கல்யாணம் செய்து வருகிறார்கள். இது ஒரு நாடோடி கும்பல் என்பதாலோ என்னவோ காவல்துறை, கோர்ட்டு என ஒன்றுகூட இவர்களை எதுவுமே கேட்பதும் கிடையாது.

வீடியோ வைரல்
அந்த கல்யாண மண்டபம் முழுக்க கூட்டம் நிரம்பி வழிகிறது. வெட்கமே இல்லாமல் இவர்கள் கல்யாணம் செய்தால், அதற்கு வாழ்த்து கூற குடும்பம் குடும்பமாக வந்து அரங்கத்தில் உட்கார்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இந்த கல்யாணத்துக்கு அலெக்ஸ் என்ற பாடகர் சென்றிருந்தார். அவர்தான் இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

விளையாடிய மாப்பிள்ளை
அந்த வீடியோவில் 10 வயசு மாப்பிள்ளையையும், 8 வயசு பெண்ணையும் மணமேடையில் அலங்காரம் பண்ணி உட்கார வெச்சிட்டாங்க. எதுக்கு உட்கார வெச்சிருக்காங்க என்றே தெரியாமல் இரண்டு குழந்தைகளும் மிரண்டு விழிக்கின்றன. சுற்றி என்ன நடக்கிறது என்றும் தெரியாமல் பொம்மையை வெச்சிக்கிட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க.

அழுத மணப்பெண்
இதில் பொண்ணு கிட்டஇருந்து பொம்மையை பறிச்சிடவும் அந்த குழந்தை அழ ஆரம்பிக்குது. இப்படி நடந்த இந்த மழலை கல்யாணம் வைரலாகி வருகிது. இதற்கு ஏராளமான கண்டனங்களும் பதியப்பட்டு வருகின்றன. இப்படி உலகத்துக்கே இந்த கல்யாண விஷயம் தெரிந்து விட்டதால் விரைவில் நாடோடி கும்பலை தூக்கி உள்ளே வைக்க போறாங்களாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications