Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

9 நாடுகள்.. 6500 கி.மீ.. இங்கிலாந்திலிருந்து மெக்காவிற்கு நடந்தே சென்ற ஈராக் நபர்.. சுவாரசிய பின்னணி

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ஹஜ் பயணத்திற்காக ஈராக்கை சேர்ந்த நபர் ஒருவர் 6 ஆயிரத்து 500 கி.மீ தூரம் அதாவது, இங்கிலாந்து நாட்டில் இருந்து மெக்காவுக்கு நடந்தே சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைதி, ஒற்றுமையை பரப்புவதற்காக இந்த ஹஜ் பயணம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ். ஹஜ் என்றால் நாடுதல் என்று பொருள். இறைவனை நாடி மெக்காவில் உள்ள கஃபத்துல்லாவுக்கு சென்று வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதே ஹஜ் பயணம் என்பதாகும்.

இந்தப் பயணத்தை ஆண்டு முழுவதும் செய்ய முடியாது. இஸ்லாமிய மாதத்தின் படி துல்ஹஜ் மாதம் மட்டுமே இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்

 10 லட்சம் பேருக்கு அனுமதி

10 லட்சம் பேருக்கு அனுமதி

அந்த வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ்ஜில் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். நடப்பு ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூலை 7-ந் தேதி தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டில் 10 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் சவுதி அரேபிய மக்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பயணிகள் முஹம்மது நபியின் பிறந்த ஊரான மக்கா மற்றும் அவரது நினைவிடம் அமைந்துள்ள மதினா நகரங்களுக்கு புனித யாத்திரை செல்கின்றனர்.

 6,500 கி.மீ நடைபயணம்

6,500 கி.மீ நடைபயணம்

இந்த நிலையில், ஈராக்-குர்திஷ் வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் ஆதம் முகம்மது (வயது 52) என்பவர், 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நடந்தே மெக்கா வந்து தனது கடமையை நிறைவேற்றியுள்ளார்.

இங்கிலாந்தின் வோல்வெஹம்ப்டன் பகுதியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு(2021) ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி தனது பயணத்தை தொடங்கியுள்ளார். தன்னுடன் தோராயமாக 300 கிலோ எடை கொண்ட வாகனம் ஒன்றையும் இழுத்து வந்தார். இந்த வாகனத்தில் இஸ்லாமிய பாடல்களை ஒலிக்கவிட்டபடி நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, லெபனான், மற்றும் ஜோர்டான் ஆகிய 9 நாடுகளை கடந்து மெக்காவுக்கு வந்தார்.

 அமைதி, ஒற்றுமையை பரப்புவதற்காக

அமைதி, ஒற்றுமையை பரப்புவதற்காக

அதாவது, 6,500 கி.மீட்டர் தூரம் நடந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆதம் முகம்மது இந்த தொலைவை கடக்க சுமார் 10 மாதங்கள் 25 நாட்கள் எடுத்து கொண்டுள்ளார். ஒரு நாளுக்கு சுமார் 17.8 கி.மீ நடந்துள்ளார்.

இது குறித்து ஆதம் முகம்மது கூறுகையில், ''மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்றோ? அல்லது பணத்திற்காக நான் இதை செய்யவில்லை.
இனம், நிறம், மதம் எதுவாக இருந்தாலும் மனிதர்களாகிய நாம் அனைவரும் சமம் என்பதை உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகவும் அமைதி, ஒற்றுமை ஆகியற்றை பரப்பவுவதற்காகவும் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இதையே இஸ்லாமும் போதிக்கிறது" என்றார்.

 டிக்-டாக்கில் வீடியோ

டிக்-டாக்கில் வீடியோ

பல நாடுகளின் எல்லைகளை கடந்து சென்ற ஆதம் முகம்மதுவுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது பயணத்தின் நிகழ்வுகளை டிக்-டாக்கிலும் ஆதம் முகம்மது பதிவிட்டு வந்தார். இதனால், சமூக வலைத்தளங்களிலும் அவரது பயணம் குறித்த செய்திகள் அதிகம் பகிரப்பட்டன. அந்த வகையில் டிக்-டாக்கில் மட்டும் அவரை லட்சக்கணக்கானோர் தற்போது பின் தொடர்கின்றனர்.

மினா நகரத்தை கடந்த மாதத்தில் சென்றடைந்த ஆதம் முகம்மதுவை அங்குள்ள பொறுப்பு ஊடகத்துறை அமைச்சர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபி வரவேற்றார். மேலும், அவருக்கு அங்குள்ள அமைச்சர் விருந்து அளித்தார். தொடர்ந்து அவரிடம் ஹஜ் அனுமதிக்கான நடைமுறைகளையும் செய்து கொடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+